எட்டு சிமி அமைப்பினர் போலி என்கவுண்டரில் படுகொலை உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்மத்திய பிரதேசத்தில் சிமி அமைப்பினர் என சந்தேகிக்கும் 8 பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் சிறையில் இருந்து 8 தடை செய்யப்பட்ட சிமி அமைப்பினர் என சந்தேகிப்பவர்கள் சிறைக் காவலரை கொன்றுவிட்டு போபால் மத்திய சிறைச்சாலையிலிருந்து நேற்று அதிகாலை தப்பிச் சென்றதாக அந்த மாநில காவல்துறை தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, தப்பி ஓடிய 8 பேரும் போபால் புறநகர் பகுதியான இன்த்கெடி எனும் இடத்தில் 8 பேரும் காவல்துறையினரால் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில்,” சிமி இயக்கத்தினர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் முக்கியமானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.’’ எனக் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.