முத்துப்பேட்டையில் இந்தியன் வங்கியின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! பெரும் பரபரப்பு..திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 500, 1000 ருபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து மக்களை அவதிக்குள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து இன்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்தியன் வங்கியின் முன்பு கண்ட ஆர்ப்பாட்டம் வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், நகர தலைவர் கி.மு.ஜகபர் அலி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட செய்தி தொடர்பாளர் மு.முகைதீன் பிச்சை வரவேற்று பேசினார். முன்னதாக காங்கிரசார் வங்கி வளாகத்திற்குள் செல்ல முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வங்கி முன்பு நிறுத்தினர். அப்பொழுது  மத்திய அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சுப்பையன், காங்கிரஸ் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ஜீவி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரசேகரன், ராஜ்மோகன், திருநாவுக்கரசு, வட்டார துணைத்தலைவர் ஐ.எஸ்.ஆர்.பாலா,  நகர துணைத்தலைவர்கள் வேல்முருகன், குலாம் ரசூல், பொருளாளர் சந்திரமோகன், சமூக ஆர்வலர் முகமது மாலிக், கூட்டணி கட்சி சார்பில் திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன், முன்னால் ஒன்றிய கவுன்சிலர் ஜாம்பை கல்யாணம், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, முஸ்லீம் மாவட்ட செயலாளர் முகைதீன் அடுமை,  மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தீன்முகமது, ஒன்றிய தலைவர் நைனா முகமது, நகர தலைவர் ஹாமீம், தமுமுக நகர செயலாளர் சம்சுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி, தமுஎச தலைவர் செல்லத்துரை,  எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், நகர தலைவர் மாலிக், வர்த்தகக் கழக தலைவர் ராஜாராமன், பொதுச்செயலாளர் கண்ணன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் மெட்ரோ மாலிக் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

 முடிவில் நகர காங்கிரஸ் செயலாளர் நாசர் நன்றி கூறினார். அப்பொழுது ஆர்ப்பாட்டம் முடிந்ததும் காங்கிரசார் மாலையுடன் ஊர்வலமாக சென்று வங்கி அருகில் உள்ள ஏ.டி.எம் அறைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத போலீசார் அங்கு சென்று மாலையை அகற்றினர்.

செய்தி
மு.முகைதீன் பிச்சை,
மாவட்ட செய்தி தொடர்ப்பாளர்,
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.