பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விவசாயிகள் சங்கம் முடிவு!தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திருச்சியில்  நடைப்பெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அய்யாகண்ணு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததன் மூலம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அவமதித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதனைக் கண்டிக்கும் வகையில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.