மைசூர் புலி திப்பு சுல்தானின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் – கர்நாடக அரசு உறுதிதிப்பு சுல்தான் கி.பி.1782 முதல் 1799-ம் ஆண்டு வரை மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்தார். வீரத்திலும் விவே கத்திலும் சிறந்து விளங்கிய திப்பு சுல்தானின் ஆட்சி காலத்தில் மைசூரு மாகாணத்தின் எல்லை பன்மடங்கு பரந்து விரிந்தது. போர்க்கலையில் சிறந்து விளங்கி யதால் திப்பு சுல்தான் ‘மைசூரு புலி’ என அழைக்கப்பட்டார். வெள்ளையர்களுக்கு எதிரான சுதந்திர போராட்டத்திலும் ஈடிணையற்று போராடினார்.

இந்நிலையில் திப்பு சுல்தானின் பிறந்த நாளை, கடந்த ஆண்டு கர்நாடக அரசு முதல் முறையாக அரசு விழாவாகக் கொண்டாடியது. இதனை கண்டித்து குடகில் பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் பேரணி நடத்தின. அப்போது வன்முறை வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கர்நாடக அரசு மீண்டும் திப்பு சுல்தானின் பிறந்த நாளான நவம்பர் 10-ம் தேதி ”திப்பு ஜெயந்தி” என்ற பெயரில் அரசு விழா கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.

இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம், சிவசேனா உள்ளிட்ட இந்துத் துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடக் கூடாது. இதை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்’’ என்றும் அறிவித்துள்ளனர்.

இதற்கு பதிலடி அளித்துள்ள கர்நாடக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் ரோஷன் பெய்க், ” மைசூருவை ஆண்ட திப்பு சுல்தான் கர்நாடகாவின் வளர்ச்சிக்கும், கன்னட மொழியின் வளர்ச்சிக்கும் கடுமையாக உழைத்தார். சுதந்திர போராட்டத்தின் துவக்கக் காலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக திறம்பட போரிட்டார். ஏராளமான இந்து கோயில்களுக்கு நிலம், நகை, பணம் உள்ளிட்டவைகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். எனவே அவரது பிறந்த நாளை மத விழாவாக அல்லாமல் கலாச்சார விழாவாக கொண்டாடுவதில் அரசு உறுதியாக இருக்கிறது’ என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.