முத்துப்பேட்டை அருகே விநாயகர் சிலையை காணவில்லை போலீஸ் தேடிவருகிறதுதிருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சியில் செல்வவிநாயகர் கோயில் இருந்தது. பழமையான இக்கோயிலை அகற்றி விட்டு அப்பகுதி பக்தர்கள் தற்போது புதிதாக கோயில் கட்டி வருகின்றனர். இதையொட்டி கோயிலில் இருந்த விநாயகர் கற்சிலையை அருகே உள்ள கொட்டகையில் வைத்து வணங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு விநாயகர் சிலை திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் விநாயகர் சிலையை சுற்றுப்புறங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே முத்துப்பேட்டை போலீசில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  மாயமான விநாயகர் சிலை 2 அடி உயரம் கொண்டதாகும். மேலும் சிலை மாயமானதை தொடர்ந்து நடந்து
வந்த திருப்பணிகள் நிறுத்தபட்டன

Thanks To: Dinakaran
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.