பொதுசிவில் சட்டம் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் – ஷரிஅத் மாநாட்டில் தீர்மானம்



திருநெல்வேலி: மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஷரிஅத் மாநாட்டில் மத்திய அரசு பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மஜ்லிஸூல் உலமா அமைப்பின் சார்பில் ஜின்னாத் திடலில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு ஜமாத்துல் உலமா சபையின் மாவட்டத் தலைவர் டி.ஜே.எம். ஸலாஹூத்தின் ரியாஜி தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.ஏ.எஸ். முஹம்மதுஅபுபக்கர், முன்னாள் பேரவை உறுப்பினர் வி.எஸ்.டி. சம்சுல்ஆலம், பொறியாளர் எஸ்.கே. செய்யதுஅஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டை, அமைப்பின் தலைவர் பி.ஏ. காஜாமுயினூத்தீன் தொடக்கி வைத்தார்.

சென்னை மந்தைவெளி தலைமை இமாம் கே.எம். முஹம்மதுஇல்யாஸ், சென்னை அடையாறு தலைமை இமாம் எம். சதீதுத்தீன், தமிழக மஸ்ஜிதுகள் கூட்டமைப்பின் தலைவர் எம். சிக்கந்தர், மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ். ஹைதர்அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலர் எல்.கே.எஸ். மீரான்முகைதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் கே.எஸ். சாகுல்ஹமீது உஸ்மானி, எம்.கே.எம். முஹம்மதுஷாபி உள்ளிட்டோர் பேசினர்.

தீர்மானங்கள்: முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றி பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதன் மூலம் சிறுபான்மை முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் நடவடிக்கை ஆகும். ஆகவே பொதுசிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயலர் ஐ. முஹம்மதுமைதீன் வரவேற்றார். பொருளாளர் எம்.ஏ. ஷாஹ்மதார் நன்றி கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.