அமெரிக்காவில் இஸ்லாம் மாணவிக்கு நேர்ந்த அவமானம். டிரம்ப் வெற்றி காரணமா?
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போதே இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தை கூறி வந்த டொனால்ட் டிரம்ப் விரைவில் அதிபராக பதவியேற்கவுள்ள நிலையில் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இப்போதே அங்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
நேற்று  மிச்சிகன் பல்கலைக்கழக மாணவி ஒருவரை, மர்ம நபர் ஒருவர் வழிமறித்து, அவரது ஹிஜாபை அவிழ்க்கவேண்டும் என்றும் இல்லையென்றால் மாணவியை தீயிட்டு கொளுத்தி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது தலை முடியை இழுத்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அமெரிக்க - இஸ்லாமிய கவுன்சிலில் மாணவியின் பெற்றோர் அளித்துள்ளனர்.
இதேபோல் இஸ்லாமிய ஆசிரியை ஒருவருக்கு ம்மிரட்டல் கடிதம் ஒன்று சமீபத்தில் வந்துள்ளது. அதில், அவருடைய தலையங்கியால் தூக்கிட்டுக் கொள்ள வேண்டும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. அடுத்தடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைக்கு டிரம்ப் வெற்றிதான் காரணம் என பரவலாக கூறப்படுகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.