திப்பு சுல்தான்: மைசூர் ஏவுகணையின் சிறப்புகள்- வீடியோபிரபலமான மைசூர் ராக்கெட்டுகள்:

மைசூர் ஏவுகணைகள் என்பது, இரும்பினால் செய்யப்பட்ட உறைகளால் வாட்கள் செருகப்பட்ட ஒரு அமைப்பாகும். இந்த ராக்கெட்டுகள் பல கிலோமீட்டர்களைக் கடந்து நீண்ட தூரம் பயணிக்கக் கூடியது. ஐரோப்பாவில் ஏவுகணைகள் இருந்தாலும், மைசூர் ஏவுகணைகள் அதன் நீண்டு பயணிக்கும் திறனாலும், அழிக்கும் திறனாலும் மிகவும் பிரபலமானது. ஹைதர் அலியின் மைசூர் ராக்கெட்டுகள், பிரிட்டிஷார் பார்த்த ஏவுகணைகளை விட சக்தி வாய்ந்ததாக இருந்தது. திப்பு சுல்தான் எழுதிய ராணுவ குறிப்பான ”ஃபதுல் முஹாஜிதினில்” இந்த மைசூர் ராக்கெட்டுகளின் செயல்பாட்டைக் குறித்து எழுதியுள்ளார். செலுத்தப்படும் ராக்கெட்டைத் தாங்கும், உறை இரும்பினால் செய்யப்பட்டதாக இருந்தது. ஆச்சரியமூட்டும் வகையில், அது 2 கிலோமீட்டர் வரை பயணித்து எதிரிப்படையைத் தாக்கியது.

மைசூர் ஏவுகணைகள் - கான்க்ரீவ் (Congreve) ராக்கெட்டுகளின் தந்தை:

1801-ஆம் ஆண்டில், கலோனல். வில்லியம் கான்க்ரீவ் மூலமாக ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறைக்காக ’ராயல் ஆர்செனல் ஆய்வகம்’- இங்கிலாந்துக்கு மைசூர் ராக்கெட்டுகள் அனுப்பப்பட்டன. 1805-இல், திப்புவின் காலத்திற்கு பிறகும், திப்பு சுல்தான் மற்றும் அவரது தந்தை ஹைதர் அலியின் ஆலோசனைகளின்படியே ’ராயல் ஆர்செனல்’ தனது முதல் கான்க்ரீவ் ராக்கெட் தயாராக்கி கொண்டுவந்தது. நெப்போலியப் போரிலும், 1812-இல் நடந்த போரிலும், ஆங்கிலேயப் படைகளுக்கு பயன்படுத்தியது இந்த வகை ராக்கெட்டுகளைத்தான். 1814-இல் நடைபெற்ற பால்டிமோர் போரின் வெற்றி இந்த வகை ராக்கெட்டுகளால் தான் சாத்தியமானது.

அப்துல் கலாம் திப்புவைப் பற்றி குறிப்பிட்டபோது, நாசாவில் திப்பு சுல்தானின் எண்ணங்கள் மற்றும் ராக்கெட் சோதனைகளை பெரிதும் மதிக்கப்படுவதாகத் தெரிவித்தார். நாசாவின் ராக்கெட் நிகழ்ச்சிகளின் மையமான விர்ஜினியாவின் விமான நிலையத்தின் வரவேற்பறையில் திப்பு சுல்தானின் படம் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அந்த படத்தில் போர்க்களக் காட்சிகளும், தென்னிந்தியர்கள் ராக்கெட்டை இயக்குவதாகவும் படத்தில் இருந்தது. திப்புவின் சில ராக்கெட்டுகள் க்ரீன்விச்சில் இருக்கும் அருங்காட்சியத்தில் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

அப்துல் கலாம் தனது அக்னி சிறகுகள் புத்தகத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்:


"Towards the end of my visit, I went to the Wallops Flight Facility at Wallops Island in East Coast, Virginia.  This place was the base for NASA's sounding rocket programme.  Here, I saw a painting prominently displayed in the reception lobby.  It depicted a battle scene with a few rockets flying in the background.  A painting with this theme should be the most commonplace thing at a Flight Facility, but the painting caught my eye because the soldiers on the side launching the rockets were not white, but dark-skinned, with the racial features of people found in South Asia.  One day, my curiosity got the better of me, drawing me towards the painting.  It turned out to be Tipu Sultan's army fighting the British.  The painting depicted a fact forgotten in Tipu's own country but commemorated here on the other side of the planet.  I was happy to see an Indian glorified by NASA as a hero of warfare rocketry."
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.