மரண அறிவிப்பு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் பேராசிரியர் கா. முஹம்மது பாருக்அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதலவர் கவிமணி பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் இளைய சகோதரரும், காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை பேராசிரியருமாகிய கா. முஹம்மது பாரூக் அவர்கள் ( வயது 78 ) நேற்று ( 19-11-2016 ) வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 20-11-2016 ) மாலை கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாம்கோடு அஞ்சுவண்ணம் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

பேராசிரியர் கா. முஹம்மது பாரூக் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியராக கடந்த 1963 ஆம் ஆண்டு பணியாற்றி அதிரைக்கு சொந்தக்காரர். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வராக பணியாற்றியவர். அயல் நாடுகளில் தமிழையும், இஸ்லாமிய மார்க்கத்தையும் வளர்த்தவர். 'அல் குர்ஆன் அருளுரைகள்', 'தமிழமுதம்' போன்ற அறிய நூல்களை எழுதியவர். பல்வேறு நாடுகளுக்கு சென்று பேச்சரங்க நிகழ்சிகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் சிறந்த எழுத்தாளர், கவிஞர் ஆவார்.

தகவல் உதவி:
கவிஞர் எம். முஹம்மது தாஹா
பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர்
பேராசிரியர் கலீலுர் ரஹ்மான்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.