மல்லிபட்டினத்தில் அரசு மருத்துவமனை அமைத்து தர கோரிக்கைதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம்  அடுத்து மல்லிப்பட்டினத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மருத்துவமனை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச்செயலாளர் மல்லிப்பட்டினம்  ஏ.தாஜூதீன் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரைக்கு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பி உள்ளார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது, "மல்லிப்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள கடலோர கிராமங்களுக்கு மீனவர்களும், மீன் வாங்கி செல்பவர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலை சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான முக்கியமான போக்குவரத்து பகுதியாக இருப்பதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பகுதியை கடந்து செல்கிறது. அடிக்கடி இப்பகுதியில் ஏராளமான விபத்துகளும் அதனால் உயிரிழப்பும் சேதங்களும் ஏற்படுகிறது.

அருகில் மருத்துவமனை வசதி இல்லாததால் விபத்தில் சிக்குபவர்களை தஞ்சை, திருச்சி என தொலைதூரங்களுக்கு கொண்டு செல்ல வேண்டி உள்ளது. கால தாமதத்தினால் அடிக்கடி உயிரிழப்பும் நேரிடுகிறது. எனவே கிழக்கு கடற்கரை சாலையில் அதி நவீன விபத்து சிகிச்சை மருத்துவமனையை அமைத்து தரவேண்டும்.

மல்லிப்பட்டினத்தில் உள்ள கப்பல் படை அலுவலகம்  காலி செய்யப்பட்டுள்ள இடத்தில் மருத்துவமனை அமைத்து தரவேண்டும். விபத்தில் சிக்கியவர்களை "கோல்டன் ஹவர்" என அழைக்கப்படும் நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதித்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு ஏற்படும். மாவட்ட ஆட்சியர் கருணை கூர்ந்து மனிதாபிமான அடிப்படையில் இதனை செய்து தந்தால், மக்கள் நன்றி உடையவர்களாக இருப்பர். விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதும் குறையும்" இவ்வாறு அம்மனுவில் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.