அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏழைகள் விரோத மத்திய அரசை எதிர்த்து துணிவுடன் போராட முன்வர வேண்டும்-மம்தா பானர்ஜிஅனைத்து எதிர்கட்சிகளும் ஏழைகள் விரோத மத்திய அரசை எதிர்த்து துணிவுடன் போராட முன்வர வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பு குறித்து மேற்குவங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சாதாரண மக்களுக்கு விரோதமான இந்த கருப்பு அரசியல் முடிவை திரும்ப பெறுங்கள். இந்தியா முழுவதும் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளது, மக்களின் வாங்கும் சக்தி நசுக்கப்பட்டுவிட்டது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு பெரிய கருப்பு அவமானமாக மாறியுள்ளது. சாதாரண மக்களுக்கு பாதிப்பையும், பணப்பரிவர்த்தனை செய்பவர்களுக்கு ஆதாயத்தையும் அளித்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து நான் ஒரு கவிதையும் எழுதியுள்ளேன். அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த ஏழைகள் விரோத மத்திய அரசை எதிர்த்து துணிவுடன் போராட முன்வர வேண்டும். இந்த அரசியல், நிதி அராஜகத்தை எதிர்த்து ஒன்றிணைந்து போராடுவோம். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மக்கள் வரிசையில் காத்திருந்த 3 வங்கிகள் மற்றும் சில ஏ.டிஎம்.களையும் மம்தா பானர்ஜி பார்வையிட்டார். அங்கு நின்றிருந்த மக்களிடம் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.