தம்பிக்கோட்டை வங்கியில் பணம் மாற்றி தர அலைக்கழிக்கபட்டதால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர் கணக்கை ரத்து செய்தார்!திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை வடகாட்டில் அரசு உடைமையாக்கப்பட்ட வங்கி உள்ளது. இதில் அப்பகுதியை சேர்ந்த எராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்தநிலையில் மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு எதிரொலியாக இந்த வங்கியில் கடந்த சிலதினங்களாக பணம் மாற்றிக் கொடுப்பதில் வங்கி நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது. இதில் ஒரு சில வாடிக்கையாளர்களும் வங்கி அலுவலரிடம் வாக்குவாதம் செய்தும் உள்ளனர். மேலும் இந்த வங்கியின் சேவையை விமர்சித்து பலர் தங்களது பேஸ்புக் மற்றும் வாட்சப்களில் செய்திகளும் வெளியிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவரும் அந்த வங்கியில் வாடிக்கையாளராக உள்ளார். அதனால் அன்பழகன் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வாங்க கடந்த மூன்று தினங்களாக வங்கிக்கு சென்று உள்ளார். இதற்கு வங்கி நிர்வாகம் அலைசியம் காட்டி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட முக்கிய பிரமுகர் சிலருக்கு பணம் மாற்றிக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வங்கி நிர்வாகம் மீது அதிருப்தி அடைந்த அன்பழகன் சம்பந்தப்பட்ட வங்கியில் வாடிக்கையாளராக தொடர விரும்பவில்லை. இதனையடுத்து நேற்று முன்தினம் வங்கி மேலாளரிடம் அன்பழகன் எனது கணக்கை ரத்து செய்யும்மாறு மனு கொடுத்தார். அதில் 'நான் வங்கிக்கு வரும்போதலாம் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டு அதிக வைப்பு தொகை உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வங்கியில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இது எனக்கு மிகுந்த வேதனையை தருகிறது. மேலும் ஏழை எளிய தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டது என்னால் சகித்து கொள்ள முடியவில்லை. எனவே எனது சேமிப்பு கணக்கை ரத்து செய்து எனது இருப்பு தொகையை உடனே வழங்குமாறு கேட்டுகொள்கிறேன்' என்று குறிபிட்டுள்ளார். இதனை பெற்றுக்கொண்ட மேலாளர் நீண்ட யோசனைக்கு பிறகு ரத்து செய்து கொடுத்துள்ளார். இந்தநிலையில் இதுகுறித்த புகார் மனுவை அன்பழகன்,அந்த அரசு உடைமையாக்கப்பட்ட வங்கி சென்னை தலைமை அலுவலகத்திற்கும், தமிநாடு மனித உரிமை ஆணையத்திற்கும் மனுக்கள் அனுப்பி உள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வாடிக்கையாளர் அன்பழகன் கூறுகையில்: நான் நீண்ட காலமாக இந்த வங்கியில் வாடிக்கையாளராக உள்ளேன். தற்போதைய வங்கி மேலாளர் சாதாரண மக்களை மதிப்பது கிடையாது. அவர்களை அலைசியம் மற்றும் அலைக்கழிக்கபாடுவதும் வாடிக்கையாக உள்ளது. அதில் பாதிக்கப்பட்டவன் நானும் ஒருவன். இந்தநிலையில் தற்பொழுது 500, 1000 ரூபாய் மாற்றி கொடுபதிலும் வங்கி மேலாளர் பாரபட்சம் காட்டிவருகிறார். என்னையும் என்னை போன்ற பலரையும் பணம் இல்லை என்று பலமுறை கூறி அனுப்பி விட்டார். ஆனால் இந்த வங்கியில் அதிக வைப்பு தொகை உள்ளவர்களுக்கு மட்டும் புதிய இரண்டாயிரம் நோட்டுகள் மாற்றி கொடுத்தார். இதை என்னால் நேரடியாக காணமுடிந்தது. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் கேட்டேன் முறையாக பதில் அவர் தரவில்லை அதனால் இந்த வங்கியில் வாடிக்கையாளராக தொடர விருப்பபடாததால் கணக்கை ரத்து செய்தேன். இதுகுறித்து அந்த அரசு உடைமையாக்கப்பட்ட வங்கியின் சென்னை தலைமை அலுவலகத்திற்கும், தமிநாடு மனித உரிமை ஆணையத்திற்கும் மனுக்கள் அனுப்பி உள்ளேன் என்ன நடவடிக்கை எடுகிறார்கள் என்று பாப்போம் இதை நான் விட போவதில்லை என்றார்.
இதுகுறித்து வங்கி மேலாளர் கூறுகையில்: அப்படி ஒன்று நடக்கவில்லை இதுகுறித்து அன்பழகன் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார். இதுசம்மந்தமாக நானும் பதில் தெரிவித்து உள்ளேன் என்றார்.
படம் செய்தி
1.முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை வடக்காட்டில் உள்ள அரசு உடைமையாக்கப்பட்ட வங்கி
2.வாடிக்கையாளர் அன்பழகன்.
3.அன்பழகன் வங்கியில் கொடுத்த மனு.
4.வங்கி குறித்து பேஸ்புக்கில் வந்த மெசேஜ்.


Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.