முத்துப்பேட்டை ஒன்றிய பகுதி கொள்ளிடம் கூட்டுகுடிநீர் பைப்லைனில் சட்டவிரோத இணைப்புகள்கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் பைப்லைனில் சட்ட விரோதமாக பெறப்பட்ட இணைப்புகளை ஆய்வு செய்து அகற்றப்படும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி லோகநாதன் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்புககளுக்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் மெயின் பைப்லைன் வழியாக முத்துப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி குடிநீர் டேங்குகளை சென்றடைகிறது.

பின்னர் அருகிலிருக்கும் ஊராட்சி கிராம பகுதிகளுக்கு பைப்லைன் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் எடையூர் பகுதிலிருந்து பம்பிங் செய்யப்படும் குடிநீர் முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு சென்று அடைகிறது. இந்நிலையில் தினசரி பம்பிங் செய்யப்படும் குடிநீர் அந்தந்த பகுதிக்கு செல்லும்போது குடிநீரின் அளவு குறைந்து விடுகிறது. நீர்வரத்து குறைவால் மக்களுக்கு வழங்கும்  குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் விலைக்கு குடிநீர் வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நெடும்பலம், கள்ளிக்குடி, வேப்பஞ்சேரி, எடையூர் மற்றும் சங்கேந்தி பகுதிகளில் கடந்த 18ம்தேதி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் அதிமுக பிரமுகர்கள் பெட்ரோல் பங்கு, தனியார் பள்ளிகள் உள்பட 7 இடங்களில் மெயின் லைனில் சட்ட விரோத குடிநீர் இணைப்புகள் இருப்பதை கண்டறிந்தனர். எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் மேற்கண்ட 7 இடங்களில் அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

அதையடுத்து நேற்று கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திருட்டு குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் எடையூர் இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி தலைமையில் நடந்தது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் லோகநாதன், வீரராகவன், ஊராட்சி முன்னாள் தலைவர் குமரவேல், முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முத்துப்பேட்டை ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைன்களில் உள்ள சட்டவிரோத குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிப்பது, குடிநீர் திருட்டை கண்டறிந்து காவல்துறை உதவியுடன் குற்றவழக்கு பதிவு செய்வது வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தனி பைப்லைன் வழியாக குடிநீர் வழங்குவது என்பன குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் முத்துப்பேட்டை வரையிலும் நீண்டுள்ள பைப்லைன்களில் அனுமதியின்றி பெறப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து நடவடிக்கை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி லோகநாதன் கூறுகையில், முத்துப்பேட்டை அருகே கள்ளிக்குடியிலிருந்து எடையூர் வரையில் நடந்த சோதனையில் 7 இடங்களில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு தரப்பட்டிருந்தது. அவற்றை அதிரடியாக அகற்றி விட்டோம். மேலும் எடையூரிலிருந்து முத்துப்பேட்டை வரையிலான மெயின் பைப்லைன்களில் உள்ள சட்டவிரோத இணைப்புகளும் விரைவில் அகற்றபட உள்ளது. மேலும் அனுமதியில்லா குடிநீர் இணைப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினரிடம் புகார் மனுவும் அளிக்கபட்டுள்ளது என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.