நாற்றமெடுக்கும் தேஷபக்தி! சாமியார்களுக்கு தெரியுமா சாமானியனின் கஷ்டம்மோடியால் தேசபக்தி முலாம் பூசப்பட்ட காவி அரசின் தவறான கொள்கைகளால் பாதிப்படைந்த மக்கள் தங்கள் உளக்குமுரல்களை வீதிகளில் பிரதிபளிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

கடந்த 10 ஆம் தேதிதான் இந்த புதிய 2000₹ நோட்டுகள் மக்களின் பொதுப்புழக்கத்திற்கு விடப்பட்டது. ஆனால் பல நாட்களுக்கு முன்பே இந்த 2000₹ நோட்டுகள் பாஜக நிர்வாகிகளுக்கு கட்டுக்கட்டாக விநியோகிக்கப் பட்டுள்ளது.

அதற்கு உதாரணம் 2000₹ நோட்டு வெளியாவதற்கு முன்பே உ.பி பாஜக தலைவரின் மகள் நளினி மோர்யா கட்டுக்கட்டாக புதிய 2000₹ நோட்டுகளுடன் போஸ் கொடுத்தார். அதுபோல ஹரியானா மாநிலத்தின் பாஜக கவுன்சிலர் ஒருவர் தன்னுடைய கையில் 2000₹ கட்டுகளுடன் போஸ் கொடுத்த படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த 500₹/1000₹ ஒழிப்பு நடவடிக்கை நாட்டு நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையா? கருப்பு பண ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு நடவடிக்கையா?
இல்லவே இல்லை. கேடுகெட்ட தேஷபக்தர்கள் செய்துள்ள கூட்டு சூழ்ச்சி.

எப்படி தெரியுமா? இன்னும் சில நாட்களில் உ.பி, பஞ்சாப், கோவா,மணிப்பூர் மற்றும் உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. மேற்படி 5 மாநிலங்களிலும் உள்ள கட்சிகள் தேர்தல் செலவுகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை பதுக்கி வைத்திருந்தார்கள்.

இதை மோப்பம் பிடித்த பாஜகவின் மேல்மட்டத் தலைமை இதற்காக ஒரு ரகசிய ஆலோசனையை நடத்தி ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பாஜக தலைமைக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்கப்பட்டு பணம் வெளியாவதற்கு முன்பே 2000₹ நோட்டுக் கட்டுகள் ரகசியமாக மாற்றிக் கொடுக்கப்பட்டது.

பாஜகவிற்கு சாதகமில்லாத மாநிலங்களில் அவர்கள் வைத்திருந்த ஸ்டாக் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. அதற்கு ஆதாரம் மோடி அறிவித்த இரவு 8 மணிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மேற்கு வங்க பாஜக தலைமை ரூபாய் 1 கோடியை வங்கியில் டெபாசிட் செய்தது. அதுமட்டுமின்றி பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், மார்வாடிகளுக்கும் ஒரு மாதத்திற்கு முன்பே தகவல் கொடுக்கப் பட்டு விட்டது. இதை தமிழ் ஹிந்து பத்திரிகை ‘முன்பே தெரியும்’ என்ற தலைப்பில் வெளிப்படுத்தியிருந்தது.

ஆக இப்போது 5 மாநிலத்தில் உள்ள கட்சிகளில் செல்லத்தக்க 2000₹ நோட்டுக்கள் கட்டுக்கட்டாக உள்ள ஒரே கட்சி பாஜக மட்டுமே! மற்ற கட்சிகள் தங்களிடம் உள்ள நோட்டுக்களை மாற்றினாலும் கூட சில லட்சங்களை மட்டுமே மாற்ற முடியும். இப்போதைக்கு 5 மாநிலங்களிலும் பணம் கொடுத்து வாக்குப் பெற செல்வாக்குப் பெற்ற ஒரே கட்சி பாஜக மட்டுமே!

மாலேகானில் குண்டுகளை வைத்துவிட்டு அதை முஸ்லிம்கள் மீது பழி போட அங்கே சில உருதுமொழி பிரசுரங்களைப் போட்டு விட்டுச் சென்றனர். அதேபோல மோடியின் இந்த அறிவிப்பை உண்மைப்படுத்த சில 500₹ நோட்டுக்களை எரித்துப் போட்டார்கள் தேஷபக்தர்கள். இதில் பெரிய காமெடி என்னவென்றால் பழைய நோட்டுகள் கொளுத்தப்பட்ட இரண்டு இடங்களையும் போலிசுக்கு காட்டியது உள்ளூர் பாஜகவின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு டெக்னாலஜி பயன்படுத்தி தயாரித்த 2000 ரூபாய் நோட்டை 3 நாட்களில் தயாரிப்பது நிச்சயமாக சாத்தியமில்லை. அப்படியானால் பல மாதங்களுக்கு முன்பே 2000₹ நோட்டை பெற்றுக் கொண்ட பாஜகவினர்தான் இந்த கள்ள நோட்டுகளையும் தயார் செய்தார்கள் என்பதற்கு இதுவே ஆதாரமாகும். அதுவும் பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது அக்மார்க் தேஷபக்தர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வடமாநிலப் பெண்கள் மோடியை விட்டு கிழிகிழியென கிழிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.