முத்துப்பேட்டை பெரியகடை தெரு ரேஷன் கடையில் எம்எல்ஏ ஆய்வுமுத்துப்பேட்டை பெரியகடை தெரு ரேஷன் கடையில் எம்எல்ஏ ஆடலரசன் திடீர் ஆய்வு செய்தார். முத்துப்பேட்டை பெரிய கடைதெருவில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்குகின்றனர். இந்தநிலையில் இந்த ரேஷன் கடையில் பொருட்கள் எடை குறைவாகவும், பலருக்கு அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்கள் கொடுக்காமல் இருப்பு இல்லை என்று கூறுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ ஆடலரசனுக்கு புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து எம்.எல்.ஏ ஆடலரசன் தீடீரென்று முத்துப்பேட்டை பெரியக்கடைதெருவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் எடை சரியாக உள்ளதா, என்னென்ன பொருட்கள் இருப்பு உள்ளது என்று ஆய்வு செய்தார். பின்னர் மக்கள் திருப்திபடும் வகையில் அரசு வழங்கும் பொருட்களை சரியாக தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்று அலுவலரிடம் கேட்டுக்கொண்டார்.

அப்போது முன்னாள் பேரூராட்சி தலைவர் கார்த்திக், குன்னலூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், நகர காங்கிரஸ் தலைவர் ஜகபர் அலி, இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா.பிரபாகர், திமுக வார்டு செயலாளர்கள் ரபிஅகமது, தாஜ்அலி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜகபருல்லா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.