தஞ்சை மாநகர தமுமுக வின் மனிதநேய பணி...3 நாட்களாக சாலையோரம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வயதானவரை தக்க சமயத்தில் தமுமுக நிர்வாகிகள் காத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய பகுதியையொட்டி சுமார் 70 வயது மதிக்கதக்க பெரியவர் கீழே விழுந்து காலில் அடிப்பட்டு 3 நாட்களாக உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த தகவலை பல அமைப்புகளிடம்
தெறிவிக்கப்பட்டுள்ளது யாரும் உதவிசெய்ய முன்வரவில்லை இதை கண்ட ஷபி என்ற சமூக ஆர்வலர் மனிதநேய மக்கள் கட்சி யின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா அவர்களிடம் தெரிவித்தார். அடுத்த அரை மணி நேரத்தில் தஞ்சை பாதுஷா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ரியாஸ் அகமது, மாநகர செயலாளர் அப்துல் ஜப்பார், நிர்வாகிகள் லுக்மான், நூர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் முதியவரை கண்டு தகவல்களை பெற்றுக்கொண்டு தமுமுக ஆம்புலன்ஸ் ல் பெரியவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
பிரார்த்திப்போம் சகோதரர்களின் பணி சிறக்க...
தகவல்:
தஞ்சை மாநகர தகவல் பிரிவு.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.