ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க மேலும் இரண்டு நாள்களாகும்: ரிசர்வ் வங்கிபுதிய நோட்டுகளுக்கான தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் இயங்கி வருவதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சார்பில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில்,

நாடு முழுவதிலும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் போதுமான அளவு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வங்கிக் கிளைகளின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் அந்த மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மக்களின் தேவைகளைச் சமாளிப்பதற்காக, ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பழைய நோட்டுகளை சுமுகமாகவும் இடையூறு இல்லாத வகையிலும் புதிய நோட்டுகளாக மாற்றித் தரும் மிகப்பெரிய பொறுப்பு, வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளை ஏற்கும் வகையில் ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க மேலும் இரண்டு நாள்களாகும். இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், கடன் அட்டைகள், பற்று அட்டைகள், இணைய வழி வங்கி, செல்லிடப்பேசி வங்கி உள்ளிட்ட வசதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளைத் தொடங்குபவர்களுக்கு அவர்கள் கேட்டுக்கொண்டால், வங்கி அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளால், பணத்தை நேரடியாகக் கையாளுவது குறைந்து தொழில்நுட்ப வசதிகளின் மூலம் பயன்படுத்துவது அதிகரிக்கும். மேலும், பணத்தை மாற்றுதல், வைப்புகளாக செலுத்துதல் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்துகிறார்களா? என்பது குறித்து கண்காணித்து வருகிறோம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.