மத்திய அரசை விமர்சித்தால் தேசதுரோகி என்பதா? காங்கிரஸ் சாடல்மத்திய அரசை விமர்சித்து கேள்வி எழுப்புபவர்களை தேச துரோகிகள் என குற்றம் சாட்டுவதா என காங்கிரஸ் கட்சி கேள்வி  எழுப்பியுள்ளது. நாடு முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் கரன்சிகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பொது மக்கள்  அவதிப்பட்டு வருகின்றனர். மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது. இதுகுறித்து அக்கட்சியின்  தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் கூறுகையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, தங்களை  நோக்கி யாரும் கேள்வி கேட்பதை விரும்புவதில்லை.

யாராவது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கேள்வி எழுப்பினால் அவர்களை தேசதுரோகிகள், பொறுப்பற்றவர்கள் என்று  முத்திரை குத்தப்படுகிறார்கள். உள்நாட்டில் கரன்சிகளை செல்லாது என்று அறிவித்தால் மட்டும் போதாது. வெளிநாடுகளில் இருந்து  இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யப்படும் கள்ள நோட்டுகள் குறித்தும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போது வரைக்கும்  எவ்வளவு போலி கரன்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

கருப்பு பணத்தை மீட்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜ கூட்டணி அரசு தோல்வி அடைந்து விடட்து. அதை ஒழிப்பதற்கு  என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். அடுத்த தேர்தலில் காசோலையை மட்டுமே  பயன்படுத்தி பாஜ தேர்தலை சந்திக்கும் என்று கூறினால் அப்போது நான் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்  என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.