இஸ்லாமிய இளைஞர்கள் அடிக்கடி கைது பின் விடுதலை ஏன்?"முக்கியத் தலைவர்களைக் கொல்ல சதி" என்னும் பெயரில் அடிக்கடி சில இஸ்லாமிய இளைஞர்கள்  கைது செய்யப்படுவதும், பின்னர் அந்தச் செய்தி அப்படியே அமுங்கிப் போவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. சிங்களளின் வெள்ளை வேன் கடத்தலுக்கு இணையாக இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவது என்ன?

1. இஸ்லாமிய சமூகத்தை ஒருவித பயத்துடன் வைத்திருப்பது மற்றும் அரசியல் நீக்கம் செய்வது.

2. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டி இந்துத்துவ பாசிச பரப்புரையை தீவிரப்படுத்துவது.

தமிழகம் மிகவும் விழிப்பாக இருப்பது நல்லது.இஸ்லாமியர்கள் தாங்கள் இருக்கும் கட்சிகளின் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து இதனை ஒரு பொதுப் பிரச்சினையாக மாற்ற வேண்டும்.  இதுபோன்ற கைது வழக்குகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும்.

Gurunathann  Sivaraman
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.