கொடி காத்த குமரன் சுதந்திர போராட்ட தியாகிய? - சர்சை ஆரம்பம்தேசியக் கொடி வடிவமைக்கப்பட்டது 1947 ஆம் ஆண்டு.

ஆனால், கொடி காத்த குமரனோ கொடியைத் தாங்கியதோ 1932ல். அப்பொழுது இந்திய தேசத்திற்கென தனிக் கொடி ஏதும் இல்லை.

அன்றைக்கு இருந்தது காங்கிரஸ் கட்சியின் கொடியைத் தான் திருப்பூர் குமரன் தாங்கினாரே தவிர, தேசியக் கொடியை அல்ல.

இல்லை, அன்றைய காங்கிரஸ் கொடி தான், தேசியக் கொடி என சங்கப் பரிவாரக் கும்பல் ஏற்றுக் கொள்ளத் தயாரா?!

அன்றைய காங்கிரஸ் கொடி தான் தேசியக் கொடி எனில், ஏன் நேதாஜி அவர்கள் மூவர்ணக் கொடியின் நடுவில் புலியைப் பொறித்தார்?!

எனவே, குமரன் காத்தது காங்கிரஸ் கொடியைத் தானே தவிர, இந்திய தேசியக் கொடியை அல்ல.

திருப்பூர் குமரன் என வேண்டுமானால் சொல்லுங்கள்.

காங்கிரஸ் தியாகி என வேண்டுமானால் கூறுங்கள்.

சுதந்திரப் போராட்டத் தியாகி எனக் கூறாதீர்கள்!

முனீப் அபூ இக்ராம்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.