உலகில் அதிகம் துன்புறுத்தலுக்கு ஆலாகும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்மியன்மாரில் கடந்த ஆறு வாரத்திற்குள் ரொஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் கிராமங்களில் 1,200 க்கும் அதிகமான வீடுகள் அழிக்கப்பட்டிருப்பதாக மனித உரிமை கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.
அந்த குழு வெளியிட்டிருக்கும் செய்மதி படங்களில், நவம்பர் 10 தொடக்கம் 18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் 820 கட்டுமானங்கள் தரைமட்டமாக்கப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
மியன்மாரின் அதிகம் பதற்றம் கொண்ட ராகின் மாகாணத்தில் இராணுவ நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தீவிரவாதிகளை குறி வைத்து தாங்கள் தாக்குதல் நடவடிக்கைகள் எடுத்ததாக மியான்மர் அரசு கூறியிருந்தாலும், பலியானவர்களில் ரொஹிஞ்சா முஸ்லீம் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருந்ததை சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ள படங்கள் மற்றும் காணொளிகள் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரொஹிங்கியாக்கள் உலகில் அதிகம் துன்புறுத்தலுக்கு முகம்கொடுக்கும் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர். எனினும் தற்போது இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளுக்கு சர்வதேச ஊடகங்கள் அனுமதிக்கப்படாமையால் வீடுகள் அழிக்கப்படும் செய்தியை உறுதி செய்ய முடியாமல் உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.
மியன்மாரின் பங்களாதேஷ் எல்லைப்பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற ஒருங்கிணைந்த தாக்குதலில் ஒன்பது பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே அங்கு ரொஹிகியாக்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதில் 100 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ரொஹிங்கியா செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டு, இடம்பெற்ற மதக்கலவரத்தினால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோர் இன்னமும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அதேவேளை, பல்லாயிரக்கணக்கனோர் ஆபாத்தனான கடல் வழி பயணங்களை மேற்கொண்டு பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.