சவூதி அரேபியா என்பது அரேபியர்களுக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம்களுக்கே சொந்தமான நாடு, - மன்னர் சல்மான்சவூதி அரேபியா என்பது அரேபியர்களுக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம்களுக்கே சொந்தமான நாடு, உலக முஸ்லிம்கள் அனைவரும் என் உடன்பிறவா சகோதரர்கள் : சவூதி அரேபிய மன்னர் சல்மான் பேச்சு....!!

உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி சல்மான் அவர்கள் தலைநகர் ரியாத்திலுள்ள யாமாமா மாளிகையில் நிகழ்த்திய உரை உலக முஸ்லிம்களின் உள்ளத்தை
தொடுவதாக அமைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என் மீது ஏராளமானன பொறுப்புக்கள் இருக்கிறது.

அந்த பொறுப்புகளில் முக்கியமானதும் முதன்மையானதும்
நமது அகீதாவை (கொள்கை) பாதுகாப்பதாகும்.

அதற்காக என்னவெல்லாம் என்னால் செய்ய முடியுமோ அவைகள் அனைத்தையும் இறையருளால் நான் செய்வேன்.

சவூதி அரேபியா வஹி இறங்கிய புண்ணிய தலங்களை உள்ளடக்கிய நாடாகும். அந்த புண்ணிய தலங்கள் அரபிகளுக்கு
மட்டும் புண்ணிய தலமல்ல, உலக முஸ்லிம்களுக்கும் அது புண்ணிய தலமாகும்.

அதனால் தான் சொல்கிறேன் சவூதி அரேபியா அரேபியர்களின் தேசம் மட்டுமல்ல அனைத்துலக முஸ்லிம்களின் தேசமாகும்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் என் உடன் பிறவா சகோதரர்களாகும்.

என்னுடைய சக்திக்கு உட்பட்டு என் சகோதரர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அவைகளை செய்வதில் நான் எந்த குறையும் வைக்க போவதில்லை,

மேற்கண்டவாறு மன்னர் சல்மான் அவர்கள் பேசினார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.