ஈராக்கில் கடும் போர் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் பக்தாதி மொசூலில் இருந்து தப்பி ஓட்டம்ஈராக்கில் கடும் போர் நடைபெறுவதால் மொசூலில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதி தலைவர் பக்தாதி தப்பி ஓடி விட்டார்.

ஈராக்கில் ஐ.எஸ். தீவிர வாதிகளிடம் இருந்து மொசூல் நகரை கைப்பற்றுவதில் ராணுவம்  தீவிரமாக உள்ளது. அமெரிக்கா மற்றும் குர்து படையினரின் ஆதரவுடன் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போர் கடுமையாக இருப்பதால் தாக்கு பிடிக்க முடியாமல் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால் மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் ராணுவம் வசம் வந்து விட்டது.

இதற்கிடையே, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்தாதி நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தார். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

போர் உச்ச கட்டத்தை அடைந்த நிலையில் திடீரென அவரது பேச்சு அடங்கிய ஆடியோ வெளியானது. அதில் மொசூல் நகரை தக்க வைக்க ஐ.எஸ். அமைப்பினர், தொடர்ந்து போராட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். எனவே  அவர் மொசூலில் பதுங்கி இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் அவர் மொசூல் நகரில் இல்லை. அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் என இங்கிலாந்து வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் அமைப்பின் உளவுத் துறை அளித்துள்ள  தகவலின் அடிப்படையில் தாம் இதை தெரிவிப்பதாக அவர் கூறி யுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.