சவூதியா விமானத்தில் தமிழக உம்ரா பயணி மரணம் !கடந்த வியாழன் காலையில், ஜித்தாவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த சவுதியா விமானத்தில் குடும்பத்துடன் பயணித்த முஹமது அப்துல் முத்தலீப் என்ற 63 வயதுடைய தமிழகத்தை சேர்ந்த பிரயாணி விமானம் ஓமன் நாட்டிற்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்த போது மரணமடைந்துவிட்டார்  "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்" அதை தொடர்ந்து விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இன்று வரை மஸ்கட்டில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடல் இன்று சவுதி, ஓமன் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் ஒருங்கிணைந்த ஆவண சரிபார்ப்பு வேலைகளுக்குப் பின் இந்தியா எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக உம்ரா ஏற்பாட்டாளர் மக்சூத் சாஹிப் என்பவர் தெரிவித்தார். எனினும், இறந்தவருடைய குடும்பத்தவர்கள் விசா பிரச்சனையின் காரணமாக ஒமனில் உள்நுழைய அனுமதிக்கப்படாததால் அவர்கள் சென்னைக்கு அதே விமானத்தில் சென்றனர்.

Source: Times of Oman
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.