இஸ்லாத்தை அவமதித்த ஒலிம்பிக் வீரருக்குத் தடை.!இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் தொழுகை விசியங்கள்  கேலி செய்த ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீரரும் நான்கு தடவைகள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்றவருமான லுயிஸ் ஸ்மித் ஐக்கிய இராச்சியத்தின் ஜிம்னாஸ்டிக் சபையால் இரு மாதங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீரர் லூக் கார்சன் முஸ்லிம்கள் தொழும் விதம் எனக் கூறி கேலி செய்ய அவருடன் இணைந்து லுயிஸ் சிரித்துக் கிண்டலடிக்கும் வகையிலான காணொளி வெளியானதைத் தொடர்ந்து விசாரணையை ஆரம்பித்த ஐக்கிய இராச்சிய ஜிம்னாஸ்டிக் கட்டுப்பாட்டு சபை இன்று இத்தடையை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனது செயலுக்கு நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் லுயிஸ் ஸ்மித்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.