ராம்குமார் கொலை பின்னணி : லேட்டாகும் ரிப்போர்ட் வெளிப்படும் உண்மைகள்!!!ஸ்வாதி கொலை வழக்கில் கழுத்தறுபட்ட நிலையில் கைதாகி, சிறையிலேயே மின்சார வயரைக் கடித்ததாகச் சொல்லப்பட்டு, மர்ம மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் கடந்த அக்டோபர் 1-ந் தேதி போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு 40 நாட் களைக் கடந்துவிட்டது. ஆனால், ராயப்பேட்டை பிணவறை வாசலி லேயே காத்திருந்து போஸ்ட்மார்ட்டம் (post mortem ) ரிப்போர்ட்டை வாங்கிச்சென்ற விசாரணை அதி காரியும் மாஜிஸ்திரேட்டுமான தமிழ்ச்செல்வி அந்த ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் மரணத்துக்கான காரணம் மர்மமாகவே தொடர்கிறது. இத்தனை நாட்கள் ஆகியும் பி.எம். ரிப்போர்ட்டை வெளியிடாத மர்மம் என்ன? அந்த ரிப்போர்ட்டில் அப்படி என்னதான் உள்ளது? விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

வாயில் அல்ல… நெஞ்சில்!

போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு முந்தைய ராம்குமாரின் புகைப்படத்தை நம்மிடம் காண்பித்த போஸ்ட்மார்ட்டம் டீம் டாக்டர் ஒருவர், ""சிறையில் இருந்த ராம்குமார் ஸ்விட்ச் போர்டை உடைத்து மின்சாரக் கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டான் என்றுதான் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால், நன்றாக பரிசோதனை செய்து பார்த்துட்டோம். வாயில கரண்ட் ஷாக் அடிச்சதுக்கான காயமோ தடய மோ இல்லை. இடதுபக்க மார்பில் மேலும் கீழும் ஸ்க்ரூ டைப்பில் இரண்டு காயங்கள் உள்ளன. இதை, பஞ்சர் ஊண்ட் (puncture wound) என்று சொல்லுவோம். வலதுகை தோள்ப்பட்டையில் பிறாண்டியது போன்ற காயம், தாடைப் பகுதியில் காயமும் இருந் தது. அப்படிப் பார்த்தால், மின்சாரமானது நெஞ்சுப் பகுதியில்தான் பாய்ந்துள்ளது. அதனால், நெஞ்சுப்பகுதியில் Electrocution என்றுதான் பி.எம். ரிப்போர்ட்டில் எழுதியுள் ளோம்'' என்றவரிடம் "ராம்குமாரின் மரணம் எப்படி ஏற்பட்டது?' என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

""யாராவது கொலை செய்து கரண்ட் ஷாக் வைத்திருந்தால் ஹிஸ்டோபெத்தாலஜி ரிப்போர்ட் டில் தெரிந்துவிடும். உணவில் ஏதாவது கலந்து கொடுத்து கொலை செய்திருந்தால் விஸ்ரா ரிப் போர்ட்டில் முழுமையாகத் தெரியும். ஆனால், சம்பந்தப்பட்டவரை மயக்கமடைய வைத்து கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்திருந்தால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் மட்டுமல்ல... ஹிஸ்டோபெத்தாலஜி, விஸ்ரா எந்த ரிப்போர்ட்டி லும் கண்டுபிடிப்பது சிரமம். காவல்துறையின் உண்மையான ஸ்பாட் இன்வெஸ்டிகேஷனில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்'' என்று பகீரூட்டு கிறார். நாம் ராம்குமாரின் ஃபோட்டோவைக் கேட்க... ""மெடிக்கோ லீகல் கேஸில் இவ்வளவு நேரம் பேசியதே எனக்கு ஆபத்துதான்''’என்றபடி நழுவினார் டாக்டர்.

மரணத்தை மறைத்த வார்டன்!
ஞாயிற்றுக்கிழமை மாலை 4:32 மணிக்கு சிறை மருத்துவர் நவீன்குமாருக்கு தொடர்புகொள்கிறார் ஆண் நர்ஸ். 3 நிமிடங்களில் பதறியடித்துக்கொண்டு ஓடிவருகிறார் டாக்டர் நவீன்குமார். ஸ்ட்ரெக்சரில் வைத்து தள்ளியபடி கொண்டுவரப்பட்ட ராம்குமாரின் உயிரை மீட்கப் போராடுகிறார். ஆனால், பல்ஸ் இல்லை. ஆனால், ராம்குமாரின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்ட கிரேடு-2 வார்டன் கார்த்திக், "சாதாரண ஃபுட் பாய்சன்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளோம்' என்று கேஷுவலாக சொல்லிவிட்டு ஃபோனை துண்டித்தார். 108 ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தவரும் இவர்தான். ராம்குமாரின் வழக்கறிஞர் தொடர்புகொண்டபோது பேசியதும் இவர்தான். "ஏன் அப்படி தவறான தகவலை கொடுத்தீர்கள்?' என்று நாம் வார்டன் கார்த்திக்கை தொடர்புகொண்டு கேட்டபோது, ""எனக்கு டைரக்ஷன் கொடுக்கப்பட்டது. அதனால், அப்படிச் சொன்னேன்'' என்று முடித்துக்கொண்டார். அருகி லுள்ள, ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் "சிறைக் கைதியை இங்கு எப்படி அழைத்து வந்தீர்கள்?' என சிறை டாக்டர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் நர்ஸுகளின் உயிரை வாங்கிவிடுவார்கள். எப்படியும் ராம்குமாரை காப்பாற்ற முடியாது என்பது தெரிந்த பிறகு தான் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டுவரப் பட்டது உடல்.

ராம்குமார் இறந்த செய்தியை சிறை டாக்டர் நவீன்குமார், உயரதிகாரிகளுக்கு இன்ஃபார்ம் பண்ணினா லும் ஈ.சி.ஜி. எடுத்து கன்ஃபார்ம் பண்ணியது அரசு ராயப்பேட்டை மருத்துவமனையின் சீஃப் மெடிக்கல் ஆபீஸர் டாக்டர் சையத்துதான். இவர்கள் எழுதிய ஏ.ஆர். (accident register) காப்பியிலும் கூட வாயில் காயம் இருப்பதாகக் குறிப்பிடப்படவில்லை.

சிறை ஃபோட்டோ லீக்!
""ராம்குமார் கரண்ட் வயரைக் கடிக்க வாய்ப்பே இல்லை.… இது, காவல்துறையின் வேற மாதிரி என்கவுன்ட்டர் என்று சொல்லிக்கொண்டி ருக்கும்போதே, "சிறையில் ராம்குமார் கடித்த ஸ்விட்ச் ஃபோர்டு இதுதான்' என்று ஃபோட்டோ லீக் அவுட் ஆனது. எவ்வளவோ பெரிய வி.ஐ.பிகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தும்கூட அவர்களது சிறை ஃபோட்டோக்கள் வெளியில் லீக் ஆனதில்லை. ஆனால், ராம்குமார் தற்கொலைதான் செய்துகொண்டான் என்று பரப்புவதற்காக, விசாரணைக்கு வந்த மாஜிஸ்திரேட்ட
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.