துபாய் கால்வாய் அருகே புதிய கார் பார்க்கிங் மற்றும் சொகுசு படகு சேவை !துபையின் நவீன அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள துபை கால்வாயை (Dubai Canal) கண்டுகளிக்கவும், இருபுறமும் காலார நடந்து அனுபவிக்கவும் தடங்களாக இருந்த பார்க்கிங் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு, சுமார் 1600 புதிய கட்டண பார்க்கிங் (Paid parking) வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பிஸ்னஸ் பே (Business bay) பகுதியில் 652 பார்க்கிங்களும், ஷேக் ஜாயித் ரோடு பாலம் (Under the Bridge of Shk. Zayed Road) மற்றும் சபா (Safa) பகுதியில் 628 பார்க்கிங்களும், துபை கால்வாயை சுற்றி 322 பார்க்கிங்களும் (Around Dubai Canal) ஏற்படுத்தப்பட்டுள்ளன. Code G சீசன் பார்க்கிங் டிக்கெட்டுகள் செல்லாது, Code G சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் துபை கால்வாயை சுற்றியுள்ள Code A பார்க்கிங்களில் மட்டுமே தங்களின் வாகனத்தை நிறுத்தலாம்.

மெட்ரோ பயணிகள் பிஸ்னஸ் பே நிலையத்திலிருந்து 10 நிமிட நடை பயணத்தில் துபை கால்வாயை அடையலாம் மேலும் ஷேக் ஜாயித் ரோடு பாலத்திலிருந்து இருபுறமும் தலா 2 லிப்டுகள் (Lifts) இயக்கப்படுகின்றன.

துபை கால்வாயில் பயணம் செய்ய அழைப்பின் பேரில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வாட்டர் டேக்ஸிக்கள் (Water Taxies) கிடைக்கும்.

மேலும், ஜூமைரா பீச் பார்க் அருகிலுள்ள துபை கேனல் படகுத்துறை (Dubai canal marine station) மற்றும் கிரீக் மெட்ரோ நிலையம் ((Creek Metro) அருகிலுள்ள அல் ஜத்தாப் படகுத்துறை (Al Jaddaf Marine Station) ஆகியவற்றிலிருந்து காலை 10 மணி, பகல் 12 மணி, மாலை 5.30 மணிக்கும்

ஷேக் ஜாயித் பாலத்தின் கீழுள்ள செயற்கை அருவி அருகிலிருந்து ஜூமைராவை நோக்கி பயணம் செய்ய காலை 11.25 மணிக்கும், பகல் 1.25 மணிக்கும், மாலை 6.25 மணிக்கும்

ஷேக் ஜாயித் பாலத்தின் கீழுள்ள செயற்கை அருவி அருகிலிருந்து ஜத்தாப் நோக்கி பயணம் செய்ய பகல் 12.25 மணிக்கும், பிற்பகல் 2.25 மணிக்கும், மாலை 7.25 மணிக்கு படகுகள் (Ferries) இயக்கப்படுகின்றன.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.