அமீரகத்தில் உடம்பை இளைக்க வைக்கும் மருந்துகளுக்கு தடை !Dietary Supplements என்கிற போர்வையில் விற்கப்படும் மருந்துகள் உடம்பை இளைக்க வைக்கவும், ஆண்மையை அதிகரிக்க செய்யும் என விளம்பரபடுத்தப்படுகின்றன ஆனால் இவை இதய நோய்கள் உட்பட பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய உட்பொருட்களை கொண்டிருப்பது உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக அமீரக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உறுதிபடுத்தப்பட்ட ஆய்வுகளை தொடர்ந்து உடனடியாக இத்தகைய மருந்துப் பொருட்களை விற்பதற்கு தடை விதித்ததுடன் அவற்றை முழுமையாக கடைகளிலிருந்தும் அப்புறப்படுத்தவும், இறக்குமதி செய்யவும் முழுமையாக தடைவிதித்துள்ளது.

மேலும், சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரப்படுத்தப்படும் மூலிகை மருந்துகளை (Herbal Supplements) மற்றும் ஹெர்பல் காபி (Herbal Coffee) போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளது. இவற்றில் பல ஆண்களின் பலவீனமான 'ஆண்மை' அதிகரிப்பை குறிவைத்தே விளம்பரம் செய்து ஏமாற்றுகின்றனர் என்றும் இத்தகைய தடைசெய்யப்பட்ட ரசாயன கலப்பட மருந்துகள் (contain undeclared and unregistered drug ingredients) மரணத்திற்கே இட்டுச்செல்லும் எனவும் எச்சரித்துள்ளது.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.