கஃபாவின் மீது கைவைக்க நினைக்கும் பாவிகளை, பழிதீர்க்க ஒவ்வொரு முஸ்லிமும் தயார் - மதீனா இமாம்.!மதீனா பள்ளியின் இன்றைய வெள்ளிகிழமை (04) உரை கஃபாவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஷியா பயங்கரவாதிகளுக்கு சாட்டை அடி தரும் விதத்தில் அமைந்திருந்தது உருக்கமான உரை நிகழ்த்திய இமாம் அப்துல்லா பஹிஜான் தனது உரையில ஷியா பயங்கரவாதிகளை கடுமையான வார்த்தைகளில் கண்டனம் செய்தார்.

இமாம் அவர்கள் தமது உரையில் பல தகவல்களை பதிவு செய்திருந்தாலும்  மக்காவிற்கு எதிராக ஏவுகணை செலுத்திய ஷியா பயங்கரவாதிகளை பற்றி அவர்கள் கூறியதை மட்டும் சுருக்கமாக மொழி பெயர்கிறேன்.

மக்காவை காலம் காலமாக இறைவன் பாது காத்து வருகிறான். இறைவானால் புனித பூமி என்று அறிவிக்க பட்ட புனித தலமாகும் மக்கா.

மக்கா குர்ஆன் இறங்கிய பூமி. மக்காவில் அமைந்துள்ள இறைஇல்லம் உலக முஸ்லிம்களின் கிப்லா. இந்த புனித தலத்தின் மரியாதையை ஒவ்வொரு முஸ்லிமும் பேணி வருகிறான்.

மக்காவின் மீது நான் சத்தியம் செய்து சொல்கிறேன் என்று தனது சத்தியத்திற்கு இறைவன் தேற்வு செய்த சிறப்பானகநகரம் மக்காவாகும்.

நபிகள் நாயகம் அதிகம் அதிகம் நேசித்த திரு தலம் மக்காவகும். மக்காவைவிட்டு வெளியேறும் சூழல் நபிகள் நாயகத்திற்கு உருவான போது கலங்கிய கண்களோ மக்காவை விட்டு பிரிய மனம் இல்லாமலேயே பிரிந்தார்கள்.

எனது மக்கள் என்னை வெளியேற்றவில்லை என்றால், நான் மக்காவை விட்டு வெளியெறி இருக்க மாட்டேன் என்று அதை தெழிவாக சொல்லவும் செய்தார்கள்.

அப்படிபட்ட புனித மண் மக்கா மக்காவின் எதிரிகள் உலக முஸ்லிம்களின் எதிரிகள் மக்காவின் புனிதத்தை சிதைக்க நினைப்பவர்கள் உலக முஸ்லிம்களின் உணர்வுகளை சிதைக்க நினைப்பவர்கள்.

மக்காவின் பாதுகாப்பு இறைவன் கையில் இருக்கிறது. ஆயினும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மக்காவின் பாது காப்பில் பங்கிருக்கிறது. மக்காவோடு விளையாடிய கயவர்களை உலக முஸ்லிம் சமூகம் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்.

அல்லாஹ்குவால் புனித தலம் என்று அறிவிக்கபட்டு நபிகள் நாயகத்தால் அது பேணபட்டு ஸஹாபாக்களால் மதிக்க பட்டு இன்று உலகம் முஸ்லிம்கள் அனைவராலும் மதிக்க படுகின்ற மண்ணை நாசமாக்க நினைப்பவர்கள் நாசமாக போனது தான் கடந்த கால வரலாறு.

அபாபீல் என்று சிறு பறவைகளை கொண்டு ஆப்ராமின் யானை படையை அடித்து நொறுக்கி கஃபாவை பாது காத்தான் இறைவன் இன்று கஃபாவின் மீது கைவைக்க நினைக்கும் பாவிகளை பழிதீர்க்க ஒவவொரு முஸ்லிமும் தயாராக உள்ளானர்
இவ்வாறு இமாமின் உரை அமைந்திருந்தது

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.