முத்துப்பேட்டை பகுதி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு !



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் பொருட்டு 12.11.2016 மற்றும் 13.11.2016 ஆகிய  இரு நாட்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என திருவாரூர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கோட்ட நிர்வாகப்பொறியாளர் (பொ) பொறிஞர் சோ.சித்தார்த்தன் அவர்கள் வெளியிட்டுள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:

தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம்  சார்பில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் பாபநாசம்  ஒன்றியம் மண்ணிக்கரை, பட்டவர்த்தி, அண்டக்குடி ஆகிய இடங்களில் குழாய்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் பொருட்டு திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யம் நகராட்சி பகுதிகள், முத்துப்பேட்டை மற்றும் தலைஞாயிறு பேரூராட்சி, கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யம் ஒன்றியப் பகுதிகளில் 12.11.2016 மற்றும் 13.11.2016 ஆகிய இரு நாட்கள் குடிநீர் விநியோகம் இருக்காது.  எனவே உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என திருவாரூர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கோட்டம், நிர்வாகப்பொறியாளர் (பொ) பொறிஞர் சோ.சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.