ஆர்எஸ்எஸ் தொடுத்த அவதூறு வழக்கில் ராகுலுக்கு ஜாமீன்ஆர்எஸ்எஸ் தொடுத்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு பிவாண்டி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் பிவாண்டியில் கடந்த மார்ச் 2014-ல் ராகுல் காந்தி பேசிய தேர்தல் கூட்டமொன்றில், "மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்எஸ்எஸ்" என்று கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து ஆர்எஸ்எஸ் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராகுல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்று (புதன்கிழமை) ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கி பிவாண்டி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன் வாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், "காந்தியின் கொள்கைகளுக்கு குரல் கொடுப்பதற்காக நான் இன்று இந்த நீதிமன்றத்துக்கு வந்தேன். இந்நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செலுத்த நினைப்பவர்களுக்கு எதிராகவே நான் போராடுகிறேன். நாடு முழுவதும் உள்ள ஏழை மக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்களின் முன் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். நீங்கள் யாராவது வரிசையில் பணக்காரர்களோ அல்லது தொழிலதிபர்களோ காத்துக் கிடப்பதை பார்த்தீர்களா?

உங்களை வரிசையில் காத்திருக்க செய்துவிட்டு உங்கள் பணம் பெரும் தொழிதிபர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அவர்கள் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை ரூ.10 கோடியிலிருந்து ரூ.20,000 கோடி வரை பதுக்கி வைத்திருப்பவர்கள், மோடியுடன் விமானத்தில் பயணிக்கும் பெரும் பணக்காரர்கள் மீது அல்லவா எடுத்திருக்க வேண்டும். ஆனால், மாறாக இங்கு சாமானியர்கள் அவதிப்படுகின்றனர்" என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.