அலிகார் மதக்கலவரம் – இரண்டு முஸ்லிம்கள் சுட்டுக்கொலை


அலிகார் மதக்கலவரம் – இரண்டு முஸ்லிம்கள் சுட்டுக்கொலை

அலிகாரின் கோடியா கஞ் பகுதியில் தீபாவளி இரவு நடந்த மத வன்முறையில் புண்டு கான் மற்றும் அவரது மகன் முஹப்பத் கான் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவம் குறித்து இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் நடந்த அன்று புண்டு கான் மற்றும் அவரது மகன் மற்றும் தினேஷ் கஷ்யப் என்பவர்களுக்கு இடையே பார்கிங் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இது பின்னர் இரு சமூகத்திற்கும் இடையேயான மோதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலில் புண்டு கான் மற்றும் அவரது மகன் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மற்றொரு தகவலின் படி கஷ்யப் மற்றும் அவரது குடும்பத்தினர் பட்டாசு வெடிப்பதற்கு சில முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் மோதல் ஏற்ப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த இரு தகவலின் படியும் காவல்துறை வழக்கு பதிவு செய்து தினேஷ் கஷ்யப்பின் தந்தை மற்றும் சகோதரர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளது. இந்த மோதலால் காயம் ஏற்பட்ட தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி இந்த மோதலில் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தால் நாட்டுத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதில் தினேஷிர்க்கு எதிர்பாராத விதமாக துப்பாக்கிக் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 காவல்துறை துணை ஆய்வாளர்கள், 100 காவலர்கள் உட்பட கூடுதல் படைகளை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கூறபடுகிறது.
நன்றி : புதிய விடியல்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.