அமெரிக்காவில் ஹிஜாப் அணிந்து குத்துச் சண்டை போட்டியில் விளையாட அனுமதி மறுப்பு.!அமெரிக்காவின் மின்னிஸோட்டா மாகாணத்தை சேர்ந்த 16 வயது அமைய்யா ஜாபர் என்ற முஸ்லீம் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் உடையுடன் புளோரிடாவில் நடைபெற்ற இளையோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டார் என்றாலும் கூட்டு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார், எப்படி?

அமைய்யாவுக்கு (Amaiya Zafar) இழைக்கப்பட்ட அநீதியை கண்டு பொங்கியெழுந்த அவருடன் மோதவிருந்த மற்றொரு இளம்பெண் அலியா ஜார்போனியர் (Aliyah Charbonier) என்ற 15 வயது வீராங்கணை உடனடியாக தனக்கு வழங்கப்பட்ட பரிசை (Belt) 'இது உனக்கு சேர வேண்டிய பரிசு, நீ தான் உண்மையான வீராங்கணை' எனக்கூறி வழங்கிவிட்டு அதையே போட்டி அமைப்பாளர்களிடமும் தெரிவித்ததை தொடர்ந்து இருவரும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

உடை தடைக்கு எதிராக குரலும் இளம்பெண்கள் இருவருக்கும் பாராட்டும் குவிந்து வருகின்றன.

Source: The Washington Post / Msn
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.