சென்னை: சாலையோர உணவு கடைகளில் மட்டன் என்ற பெயரில் பூனைக்கறி.! அதிர்ச்சி ரிப்போர்ட்சென்னையில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் சாலையோர உணவு கடைகளில் மட்டன் என்ற பெயரில் பூனைக்கறி விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படம் ஒன்றில் நடிகர் விவேக், காக்கா பிரியாணி சாப்பிடுவது போன்ற காட்சி நகைச்சுவையாக இருந்தாலும் அது உணர்த்துவது உண்மை தான். சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல இடங்களில் காளான் போல உணவகங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அதற்கேற்ப உணவகங்களில் உணவுக்காக பயன்படுத்தப்படும் இறைச்சியில் கலப்படம் அதிக அளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மட்டன் போன்ற இறைச்சியின் விலை அதிகமாக இருப்பதால் பூனை, எலி போன்ற விலங்கின் இறைச்சியை குறைந்து விலைக்கு வாங்கி உணவுக்காக பயன்படுத்தப்படும் மட்டன் போன்ற உணவுகளில் கலப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னையில் பூந்தமல்லி, பல்லாவரம், கோட்டூர்புரம் போன்ற பகுதிகளில் நரிக்குறவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தாங்கள் எலி பிடிப்பதற்காக வைக்கும் கூண்டுகளில், பூனைகள் மற்றும் உடும்பு போன்ற விலங்குகள் அதிகளவில் சிக்குவதாக கூறுகின்றனர்.

இவ்வாறு சிக்கும் பூனை, உடும்பு போன்றவற்றை தனியாக பிடித்து அதன் கறி மற்றும் ரத்தம் என விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இவை 200 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவது வாட்ஸ் அப் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, உடும்பு ரத்தம் விற்பவர்களை கண்டுபிடித்து வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

கூண்டுகளில் சிக்கும் பூனையை பிடித்து வெந்நீரில் வேக வைத்து அதனை வெட்டி இறைச்சியாக்கி உணவகங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், 1 கிலோ பூனை கறி 110 ரூபாய்க்கு உணவு விடுதிகளுக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த விலங்கு நல ஆர்வலர்கள் பல்லாவரத்தில் சோதனை செய்து 15 பூனைகள் மீட்டுள்ளனர். இது தொடர்பாக பல்லாவரம் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளாக தெரிவிக்கிறார் விலங்கு நல ஆர்வலர் அரவிந்த்.

பூனை கறியை மனிதன் சாப்பிடும் போது வழக்கமாக உட்கொள்ளப்படும் இறைச்சி போலவே நம்முடைய வயிறு எடுத்துக் கொள்ளும், ஆனால் அந்த விலங்குகளுக்கு நோய் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் குடல் சார்ந்த பிரச்னைகள், வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படலாம் என எச்சரிக்கிறார் வயிற்று நோய் மற்றும் குடலியல் துறை மருத்துவர் மனோகரன்.

உணவகங்களில் மட்டன் என்ற பெயரில் பூனைக்கறியை விற்பதை செய்வதையும், உடும்பு போன்ற அரிய விலங்குகளை அழிப்பதையும் அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.