முத்துப்பேட்டை விஏஓ அலுவலகத்தில் எம்எல்ஏ திடீர் ஆய்வுமுத்துப்பேட்டை பெரியக்கடைதெருவில் துறைக்காடு கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. அங்கு திடீரென்று எம்எல்ஏ ஆடலரசன் ஆய்வு மேற்கொண்டார். மக்களின் அன்றாட சேவை பணிகள் தடையின்றி சரிவர நடைபெறுகிறதா, அல்லது அலைக்கழிக்கப்படுகிறதா என அங்கு இருந்த வி.ஏ.ஒ சரவணன் மற்றும் அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது வந்திருந்த மக்கள் தரப்பில்  ஒருவர், சான்று பெற பல நாட்களாக அலைவதாக கூறியதையடுத்து உடன் சம்மந்தப்பட்ட சான்றை விசாரித்து வழங்குமாறு வி.ஏ.ஒவிடம் எம்எல்ஏ ஆடலரசன் கேட்டுக்கொண்டார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கார்த்திக், குன்னலூர் ஊராட்சி தலைவர் சரவணன், நகர காங்கிரஸ் தலைவர் ஜகபர் அலி, இளைஞரணி அமைப்பாளர் இன்பா.பிரபாகர், திமுக வார்டு செயலாளர்கள் ரபிஅகமது, தாஜ்அலி ஆகியோர் உடனிருந்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.