நாடகங்கள் தொடங்கிவிட்டது: தைரியம் இருந்தால் சுவிஸ் வங்கிக்கு எதிராக சர்ஜிகல் தாக்குதல் நடத்துங்கள் மோடிக்கு உத்தவ் தாக்கரே சவால்‘தைரியம் இருந்தால், சுவிஸ் வங்கிக்கு எதிராக சர்ஜிகல் தாக்குதல் நடத்துங்கள்’’ என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சவால் விடுத்துள்ளார். என்னமா கூவுறாங்கய்யா...


ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாடு முழுவதும் வங்கி வாசல்களில் பொதுமக்கள் கால் கடுக்க காத்திருக்கின்றனர். இதனால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போதுமான அளவு பண பரிவர்த்தனை இல்லாததால், சில்லரை வியாபாரமும் முடங்கியது.

இந்த பரபரப்பு மற்றும் பதற்றத்துக்கு மத்தியில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பிரதமர் மோடி மீது பொதுமக்கள் மகத்தான நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவர்களது நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துவிடாதீர்கள். மீறினால், உங்களுக்கு (மோடி) எதிரான பொதுமக்களின் சர்ஜிகல் தாக்குதல் விளைவை காண்பீர்கள்.

தைரியம் இருந்தால்...
ஊழலுக்கு எதிராக உங்களது செயல்பாடு இருக்கும்பட்சத்தில், உங்களுடன் நாங்கள் இருப்போம். புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு இருப்பு இல்லாத சமயத்தில், உங்களது இந்த திடீர் முடிவு அமலுக்கு வந்து, பொதுமக்கள் வேதனைப்படுவதை நிரூபிக்கிறது.

அவர்களை துன்புறுத்தி என்ன நோக்கத்தை நிறைவேற்ற போகிறீர்கள்? உங்களுக்கு தைரியம் இருந்தால், இந்தியர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் சுவிஸ் வங்கிக்கு எதிராக சர்ஜிகல் தாக்குதல் நடத்துங்கள். கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வாருங்கள்.

சுங்க வரி ரத்து
அரசு ஏஜென்சிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு சப்ளை செய்யப்படும் வரையில், சுங்க வரியை அடியோடு ரத்து செய்ய வேண்டும்.

நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றாவது உங்களுக்கு புரிகிறதா? பொதுமக்களின் நிலையையும், அவர்களது கோபத்தின் விளைவுகளையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடைமுறையை பொதுமக்களின் வசதிக்கு தகுந்தவாறு மாற்றுங்கள்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே  நாடகமாடியுள்ளார்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.