லால்பேட்டையில் பதற்றம் சாலை மறியல் போலீஸ் குவிப்பு - படங்கள் இணைப்புசமூக வலைத்தளத்தில் {FACEBOOK} லால்பேட்டை முஸ்லீம் பெண்களை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் மிகவும் மிகவும் தரம் தாழ்த்தி கேவலமாக செய்தி பதிவு செய்து வந்த லால்பேட்டை கங்கிருப்பை சார்ந்த ஆறுமுகம் சென்ற அக்டோபர் 16 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ளான்.

இன் நிலையில் நேற்று இரவு யாறோ அடையாளம் தெரியாதவர்கள் ஆறுமுகத்தின் மோட்டார் பைக்கை தீயிட்டுள்ளனர் இந்த செயலை லால்பேட்டையை சேர்ந்தவர்கள் தான் செய்தார்கள் என்று 15 நபர்கள் மீது காவல் துறையில் புகார் கொடுத்துள்ளான் இந்த பொய் புகாரின் பேரில் லால்பேட்டையை சேர்ந்த மசூது அஹமது கைது செய்யப்பட்டான் இந்த செய்தி காட்டு தீ போல் லால்பேட்டையில் பரவியது லால்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டது ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து சமுதாய இயக்கத்தினரும் லால்பேட்டை கைகாட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இதனால் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் கவல் துறையை குவித்து வைத்துரிந்தனர் எதற்க்கும் பயமின்றி சலை மறியல் தொடர்ந்தது இறுதியாக கைது செய்யப்பட்ட மசூது அஹமதுவை நாளை ஜாமினில் விடுவிப்பதாக காவல்துறை அதிகாரிகள் உத்திரவாதம் கொடுத்ததால் சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் லால்பேட்டை அருகில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த ம ம க மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது சம்பவ இடத்துக்கு வந்து லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசித்ததார் .

செய்தி அறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம்.அபூபக்கர் எம்.எல்.ஏ சென்னை டி .ஜி .பி.அலுவலகத்தில் உளவுத்துறை டி ஐ.ஜி திரு ஈஸ்வர மூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து பொய் வழக்கில் கைது செய்யப்பட இளைஞரை விடுவிக்க கூறியதுடன் அமைதி ஏற்படுத்தித்தர கேட்டுக் கொண்டார்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.