இந்து முன்னணி நிர்வாகி மீது டிஎன்டிஜே நிர்வாகி போலீசில் புகார் !தன் மீது கொலை மிரட்டல் விடுத்தவர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கக்கோரி பட்டுக்கோட்டை காவல்துறையில் டிஎன்டிஜே பட்டுக்கோட்டை கிளைச் செயலர் முஹம்மது யஹ்யா புகார் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்து அமைப்பு நிர்வாகிகள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, தஞ்சை மாவட்ட அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இந்து முன்னணி  கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் இளங்கோ, தன் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, தனக்கும் தமது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கவும், அவர் மீது உரிய சட்டநடவடிக்கை எடுக்கக்கோரியும் பட்டுக்கோட்டை நகர காவல்துறையில் டிஎன்டிஜே பட்டுக்கோட்டை கிளைச் செயலர் முஹம்மது யஹ்யா புகார் தெரிவித்து உள்ளார். அப்போது டிஎன்டிஜே மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் சென்றனர்.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.