அத்தியாவசிய பொருட்கள் விலையெல்லாம் குறையப்போகுதாம்.. பொருளாதார மேதை? ஹெச்.ராஜா சொல்கிறார்மோடி அறிவிப்பால் அத்தியாவசிய பொருட்கள் விலையெல்லாம் குறையப்போகுதாம்..   பொருளாதார மேதை?  ஹெச்.ராஜா சொல்கிறார்

தங்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என பா.ஜ. க தேசிய செயலாளர்  பொருளாதார மேதை? ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருப்பதன் மூலம் தங்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என ஹெச்.ராஜா கூறியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருப்பது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை என்றார்.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி மற்றும் தங்கம் விலை குறையும் என்று கூறிய அவர் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தக கூறிய அவர், இதனால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இதில் அரசியல்வாதிகள் குமுறுவது உள்நோக்கம் கொண்டது என்று கூறிய ராஜா, கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் தப்ப முடியாது என்றார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.