இது தான் இஸ்லாம் காட்டும் வழிமுறை !!! இஸ்ரேலை காப்பாற்ற களமிறங்கிய பாலஸ்தீனம்.!இஸ்ரேலின் வடக்கு மாகானமான ஹைஃபா நகரில் கடந்த சில மாதங்களாக வறட்சியுடன் வெப்பமும் சேர்த்து தாக்கியது. இந்த நிலையில் வறட்சியின் காரணமாக, அந்த மாகாணத்தில் உள்ள, காட்டு பகுதியில் பயங்கர தீ ஏற்பட்டது.
இதையடுத்து, இந்த தீ மளமளவென பரவி, நகரின் முக்கிய பகுதி மற்றும் சட்ட விரோத குடியேற்றப் பகுதிகள் உட்பட இஸ்ரேலின் பல பிரதேசங்களை தாக்கியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகள் தீ பற்றி எரிந்துள்ளதுடன், 300 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளதாக இதுவரையில் மதிப்பிடப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டும் வேறு பிரதேசங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளனர்.
26 ஹெலிகாப்டர்கள் மூலம் 48 தீ அணைப்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் இதுவரையில் தீயை அணைக்க முடியவில்லை. இந்நிலையில், இந்த கொடூர தீயை அணைக்க துருக்கி, இத்தாலி, சைப்ரஸ், கிரீஸ் உள்ளிட்ட பல உலக நாடுகளிடம் இஸ்ரேல் உதவி கோரியுள்ளது.
இஸ்ரேலின் செயற்கைக்கோள் ஆமோஸ் 6 வெடித்தமையே இந்த தீ விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றளவும் தீ அணைந்தது போன்று தெரியவில்லை. இதையடுத்து, துருக்கி, க்ரீஸ், சைப்ரஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியுள்ளது. அந்த வகையில், இஸ்ரேல் நாட்டினால் பெரும் பாதிப்புக்கு ஆளான பாலஸ்தீன் இஸ்ரேல் தீயை அணைக்க 4 தீயணைப்பு படைகளை அனுப்பியுள்ளது. இதன் மூலம் எதிரிக்கும் உதவு மாண்புடையவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை பாலஸ்தீன் அரசு நிரூபித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.