அபுதாபியில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் வந்த நோயாளி நூர்முகமது திடீர் மரணம்தஞ்சாவூரை சேர்ந்தவர் நூர்முகமது (46). இவர், அபுதாபியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளாக டிரைவராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், இவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனால் நோய் குணமடைய வில்லை. அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், அதை ஆபரேஷன் செய்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை  அளிக்க அபுதாபி நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி, அபுதாபியில் இருந்து நூர்முகமதுவை ஏர் ஆம்புலன்ஸ் தனி விமானம் மூலம்  சென்னை அழைத்து வர முடிவு செய்தனர். அந்த விமானத்தில் மருத்துவ குழுவினரின் தீவிர கண்காணிப்பில் நூர்முகமதுவை சென்னைக்கு கொண்டுவந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த விமானம் சென்னையில் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது நூர்முகமது உயிரிழந்தார்.

இதுபற்றி விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ஏர் ஆம்புலன்ஸ் விமானம் நேற்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனே விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி நூர்முகமதுவின் உடலை பரிசோதித்து விட்டு அவர் உயிரிழந்ததை  உறுதிபடுத்தினர். பின்னர் அவரது உடல் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டது. அதன்பின்பு ஏர் ஆம்புலன்ஸ் விமானம் அங்கிருந்து வந்த மருத்துவ குழுவினருடன் மீண்டும் அபுதாபிக்கு புறப்பட்டு சென்றது.

விமான நிலைய போலீசார் நூர்முகமது உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.