எமிரேட்ஸ் விமான விபத்து தவிர்ப்பு: சிறப்பு விசாரனைக் குழு அமைப்பு!கடந்த வாரம் லண்டனில் இருந்து துபை வந்த எமிரேட்ஸ் A380 ரக சூப்பர் ஜம்போ விமானத்தின் வலதுபுற 'லேண்டிங் கியர்கள்' சரிவர இயங்காததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்து இன்று தான் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

லேண்டிங் கியர்களில் ஏற்படும் தொழிற்நுட்ப கோளாறுகள் குறித்து தனது காட்டமான அதிருப்தியை ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திற்கு எமிரேட்ஸ் விமான நிர்வாக தலைவர் டிம் கிளார்க் தெரிவித்துள்ளார்.

விமானம் தரையிறங்கும் சமயத்தில் வலது பக்க லேண்டிங் கியர்களில் பழுது ஏற்பட்டுள்ளதாக விமான கம்ப்யூட்டர் சிஸ்டம் எச்சரித்ததையடுத்து மாற்று வழிகளில் பழுதடைந்த கியர்களை இயக்க முயற்சி செய்து அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. ஒருவழியாக மெயின் கியர் மற்றும் விமானத்தின் மூக்குப் பகுதியில் அமைந்துள்ள கியர்களை மட்டுமே இயக்கி விமானத்தை பெரும் சிரமங்களுக்கிடையே வெற்றிகரமாக தரையிறக்கி பெரும் விபத்தை தவிர்த்துள்ளனர்.

இந்த சூப்பர் ஜம்போ A380 ரக ஏர்பஸ் விமானம் மொத்தம் 391 டன் எடையுடன் வயிற்றுப்பகுதியில் 2 ஜோடி சக்கரங்கள் மற்றும் மூக்குப்பகுதியில் 1 ஜோடி சக்கரங்கள் உட்பட மொத்தம் 22 லேண்டிங் கியர் சக்கரங்களில் இயங்குகிறது.

Source: 7 Days
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.