இரண்டே என்கவுண்டர்கள்.. பல குண்டு வெடிப்பு வழக்குகள் உண்மை அறியாமலேயே மரணித்தது ....



இரண்டே என்கவுண்டர்கள்.. பல  குண்டு வெடிப்பு வழக்கு மொத்தமாக க்ளோஸ்! இனிமேல் இப்படித்தானா?

போபாலில் சமீபத்தில் நடந்த என்கவுண்டர் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வருடம் நடைபெற்ற என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட 5 நபர்களும் , புனே குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள். என சந்தேகிக்க படுபவர்கள்

 இவ்விரு என்கவுண்டர்கள் மூலமாக புனே குண்டு வெடிப்பு வழக்கு கோர்ட்டில் தீர்வு எட்டப்படும் முன்பே 'முடித்து' வைக்கப்பட்டுள்ளது.

2014ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதி புனே நகரில் 2 இடங்களில் குண்டு வெடித்தது. இக்குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள். என சந்தேகிக்கபடும்  அகமது ரம்ஜான் கான், ஜாகிர் ஹூசைன், சேக் மெகபூப் ஆகிய மூவர் போபாலில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற  8 பேர் கொல்லப்பட்ட  என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தப்பியோடிய 8 சிமி இயக்கத்தினரில்  இவர்கள் மூவரும் அடங்குவர். சாப்பிடும் பாத்திரத்தால் சிறை காவலாளியை குத்தி கொலை செய்துவிட்டு இவர்கள் தப்பியோடினர். என்பது  உறுதுத்தி செய்யப்படாத  குற்றசாட்டு  இந்த நிலையில் அவர்கள் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவித்தது.

தெலுங்கானாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு என்கவுண்டரில் முகமது ஐசாசுதீன் மற்றும் முகமது அஸ்லாம் என்ற இரு சிமி இயக்கத்தினர்  சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களும் புனே குண்டு வெடிப்பில் தொடர்புள்ளவர்கள் என அப்போது அறிவிக்கப்பட்டது.
புனே குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த 5  சிமி இயக்கத்தினரும்  இவ்விரு என்கவுண்டர்களில் உயிரை பறிகொடுத்துள்ளனர். எனவே புனே குண்டு வெடிப்பு வழக்கு இத்தோடு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில், சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்டிர சமித்தி ஆட்சி நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால் இரு மாநிலங்களிலுமே சிமி இயக்கத்தினருக்கு  போலீசாரின் துப்பாக்கி குண்டுகளே பரிசாக கிடைத்துள்ளது. நீதிமன்றத்தில் வாதாடும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இனிமேல் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக  சந்தேகிக்கப்படும்  குற்றவாளிகளை போலீசார் இப்படித்தான் கையாளுவார்களா என்ற அச்சம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

போபாலில் கொல்லப்பட்ட இருவர்  பெங்களூர்-கவுகாத்தி ரயிலில் குண்டு வைத்த வழக்கில் தேடப்பட்டவர்கள். என்பது குறிப்பிடத்தக்கது  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து குண்டு வெடித்ததில், விடுமுறைக்கு ஊருக்கு திரும்பிய, பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.