இயற்கை அங்காடி என்று பெயர் வைத்து மக்களை ஏமாற்றும் பதஞ்சலி நிறுவனம்பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் இயற்கை முறையில் (organic farming) விளைவிக்கப்பட்டதா?  அவர்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட (organic) பொருட்களை விற்பனை செய்வதாக என்றாவது அறிவித்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்களா? பின் பதஞ்சலி நிறுவன விற்பனை கடைகள் எல்லாம் இயற்கை அங்காடி என்று பெயர் வைத்திருப்பதின் மர்மம் என்ன?

நான் எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள இயற்கை விளைபொருள் அங்காடியை சென்று பார்வையிடுவதுண்டு பெரும்பாலான அங்கடிகளில் பதஞ்சலி நிறுவனப் பொருட்களையும் அடுக்கி வைத்திருப்பார்கள் .என்ன நீங்கள் இதையும் விற்கிறீர்களே என்று அங்குள்ள பணியாளரிடம்  கேட்டால் விலை மலிவு சார்  நல்லா போகுது சார் என்பார்கள் இது ஆர்கானிக் பொருள் இல்லியே என்றால் அது பற்றி உரிமையாளருக்கு தான் தெரியும் என்று சொல்லி விடுவார்கள் (ஒரு சில கடைகளில் permitted colours, falavers, preservatives Expiary 2 years என்று கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டு விற்கப்படுகின்ற ஊறுகாய் டப்பாவை பார்த்து திகிலடித்திருக்கின்றேன்)

ஆக ஆர்கானிக் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லாமல் இது ஒரு பிஸினஸ் என்று கடை வைப்பவர்கள் தான் அதிகம் . நிறைய வரவேற்பு இருக்கிறது போல நிறைய வருமானம் வருகிறது போல என்ற நினைப்பில் புதிது புதிதாக கடையை திறந்துவிட்டு முழிப்பவர்களும் இதில் அடக்கம். இதில் என்ன கொடுமை என்றால் சென்னையில் மட்டும் 300க்கும் மேல் . பெரும்பாலானவை பெரிய அளவில் மெயின் ஏரியாவில் ஏசி வசதியுடன் 4 ஊழியருடன் (எப்படி கட்டுபடி ஆகிறது என்று சொன்னால் எனக்கும் சவுகரியமா இருக்கும்)

ஆக புதிதாக கடை வைக்க விரும்புவர்கள் ஒரு ஆர்கானிக் கடையை பார்வையிடும்போது அங்குள்ள பதஞ்சலி நிறுவன பொருட்களை பார்க்கும் போது ஒ இதுவும் ஆர்கானிக்தான் என்று தவறாக நினைக்க கூடும் அப்படி ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திய தவறு இயற்கை அங்காடிக்காரர்களுடையது.

பதஞ்சலி என்பது முற்றிலும் ஆர்கானிக் முறையிலான பொருட்களை விற்கின்றன ஒரு நிறுவனம் அல்ல. அது, ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஐ.டி.சி, நெஸ்லே, போன்ற FMCG பொருட்களை விற்கின்ற மற்றொரு நிறுவனம் அவ்வளவே.மிக அதிக அளவிலான கொள்முதல் மற்றும் இடைத்தரகர்கள் இல்லாமல் அவர்களின் யோகப்பயனாளர்கள் மூலம் விற்கின்ற படியால் மேற்கண்ட நிறுவனங்களை விட விலை குறைவாக விற்கின்ற  நிறுவனம் மட்டுமே .

அவர்கள் நிறுவனப் பொருளை எடுத்து பார்த்தால் அவர்கள் பயன்படுத்தும் பிரிசர்வேட்டிவ்கள் கெமிக்கல் சுவையூட்டிகள், பதப்படுத்திகள் பற்றிய குறிப்புகளை அவர்கள் பாக்கெட்டில் அவர்களே பிரிண்ட் செய்திருப்பார்கள்.

இயற்கை விவசாய பொருள் என்ற தெளிவை உருவாக்க நம்மாழ்வார் அய்யா அவர்கள் பட்ட பாட்டை தவறான பொருள் விற்பனை முறையின் மூலம் நாம் கெடுத்துக் கொண்டிருக்கின்றோம் எங்களது கடைக்கு வருகின்ற வாடிக்கையாளர்களே நீங்கள் ஏன் பதஞ்சலி பொருள் விற்பதில்லை என்று கேட்கின்ற அளவுக்கு  அது ஆர்கானிக் பொருள் என்ற எண்ணத்தை  மக்களிடையே விதைத்திருக்கிறது.

 இயற்கை அங்காடி நடத்தினால் நஷ்டம் தான் . இதில் வெற்றி பெற மிகவும் சிரமப்பட வேண்டும்தான் . விவசாயிகளிடம் பொருளை தேடி வாங்குவது கடினம்தான். ஆனால் இதை எல்லாம் தெரியாமல் கடை ஆரம்பித்து விட்டு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று மட்டும் முயற்சித்தால் இது போன்ற முட்டாள் தனங்கள்தான் நடக்கும்

எத்தனையோ பேர்கள் கஷ்டப்பட்டு ஏற்படுத்திய விழிப்புணர்வு. மக்கள் உண்மை தெரிந்து சிறிது சிறிதாக இயற்கை உர விளைபொருட்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் தருணத்தில் அவர்கள் நம்பிக்கையில் மண் அள்ளிப் போடாதீர்கள் அந்த மண் நாளை உங்கள் தலையிலும் விழக்கூடும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.