சவுதி அரேபிய தொழில்நுட்பத்தில் ஆப்பிரிக்க மீன்கள் உற்பத்தி.!கடந்த காலத்தில் கடல், ஆறு, கண்மாய்களில் இயற்கையாகவே மீன்கள் கிடைத்தன. அவற்றைப் பிடித்து மக்கள் சமையல் செய்து சாப்பிட்டனர். மீன் தேவை அதிகரிக்கவே காலப்போக்கில் கண்மாய்களில் மீன் குஞ்சுகளை விட்டு வளர்த்து விற்க ஆரம்பித்தனர்.

தற்போது மழைக்காலங்களில் மட்டுமே ஆறு, கண்மாய்களில் தண்ணீர் வருவதால் மீன் உற்பத்தி, இனப்பெருக்கம் குறைந்துவிட்டது. அதனால் அயிரை, கெழுத்தி, விரால், வெளிச்சம், ஆறா உள் ளிட்ட பராம்பரிய மீன்கள் அழிவின் விளிம் பில் உள்ளன.

இந்தியாவில் மீன் உற்பத்தியில் ஆந்திரா முன்னிலையில் இருக்கிறது. அங்கு ஆண் டுக்கு 19 லட்சத்து 64 ஆயிரம் டன் மீன்கள் உற்பத்தியாகின்றன.

தமிழகத்தில் கடல் மீன் உற்பத்தியை மட்டுமே நம்பியிருப்பதால் 6 லட்சத்து 97 ஆயிரம் டன் மீன்கள் மட்டுமே உற்பத்தியாகின்றன. மீன் தேவை அதிகமாக இருப்பதால் மீன் பண்ணைகளில் உயர் தொழில்நுட்பத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு ரக மீன் வளர்ப்பு பிரபலமடைந்து உள்ளது.

மதுரை ஊமச்சிக்குளம் அருகே தெற்கு பெத்தாம்பட்டியில் உள்ள ஒரு மீன் பண் ணையில் சவுதி அரேபிய தொழில்நுட்பத்தில் ஆப்பிரிக்க வகை மீன்களை பாலியெத்திலின் பிளாஸ்டிக் குளத்தில் வளர்த்து, விற்பனை செய்வது மீன் பிரியர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.இதுகுறித்து ஆப்பிரிக்க மீன் வளர்க்கும் எஸ்.வைத்தீஸ்வரன், எஸ்.அழகு ரவி இருவரும் கூறியதாவது:

நாங்கள், கொச்சி மத்திய கடல்சார் உயிரி னங்கள் ஆராய்ச்சி மையத்தில் எம்எஸ்சி கடல் மீன் வளர்ப்பு பற்றிய படிப்பு படித்து விட்டு, சவுதி அரேபியாவில் இருக்கும் உலகிலேயே மிகப்பெரிய மீன் பண்ணை யில் 12 ஆண்டுகள் பணிபுரிந்தோம் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி, தற்போது ரெட் திலேபியா, நைல் திலேபியா வகை ஆப்பிரிக்க மீன்களை வளர்த்து விற்கிறோம்.

ரெட் திலேபியா, நைல் திலேபியா மீன்களை வளர்க்க மூன்றரை முதல் 4 அடி ஆழத்தில் 8 உயர் அடர்த்தி பாலியெத்திலின் (ஹெச்டிபிஇ) பிளாஸ்டிக் குளங்கள் அமைத்துள்ளோம். மீன்களின் வயது அடிப்படையில் தரம்பிரித்து, தனித்தனி குளங்களில் வளர்க்கிறோம். 6 மாதத்துக்குப் பிறகு இந்தக் குளங்களில் மீன்களைப் பிடித்து விற்கிறோம்.

பொதுவாக மற்ற இந்திய மீன்கள் வளர்ப்பில் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சம் 4 ஆயிரம் மீன் குஞ்சுகளை மட்டுமே வளர்க்க முடியும். ஓராண்டுக்குப் பிறகுதான் விற்று காசாக்க முடியும். குறிப்பிட்ட காலநிலைகளில் மட்டுமே வளர்க்க முடியும்.

ஏக்கருக்கு 3 டன் மீன்கள் மட்டுமே கிடைக்கும். அதனால், ஒரே நேரத்தில் எல்லோரும் மீன்களை வளர்த்து விற்பதால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது. ஆனால், இந்த ரெட் திலேபியா, நைல் திலேபியா மீன்களை ஏக்கருக்கு 8 ஆயிரம் எண்ணிக்கையில் வளர்க்கலாம். ஒரு ஏக்கரில் 6 டன் கிடைக்கிறது. உற்பத்தி இரு மடங்கு. எல்லா காலங்களிலும் இதை வளர்க்கலாம். அதனால், நல்ல லாபம் கிடைக்கிறது.

ஒவ்வொரு திலேபியா மீனும் 350 முதல் 500 கிராம் வரை எடை இருக்கும். ஒரு கிலோ மீன்களை உற்பத்தி செய்ய 90 ரூபாய் வரை செலவாகிறது. ஒரு கிலோ ரெட் திலேபியா மீன் 180 ரூபாய்க்கும், நைல் திலேபியா மீன் 220 ரூபாய்க்கும் விற்கிறோம். உயிருடன் கொடுப்பதால் கெட்டுப்போக வாய்ப்பு இல்லை. முள் இல்லாமல் நல்ல சுவையாக இருப்பதால் விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்றனர்.

இன்குபேட்டர் முறையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி
திலேபியா மீன்கள், வாயிலேயே முட்டை களை வைத்து இனப்பெருக்கம் செய்யும். ஆனால், அந்த மீன்களின் வாயில் இருந்து முட்டைகளை எடுத்து, இன்குபேட்டர் முறையில் மாதம் 2 லட்சம் மீன் குஞ்சுகளை நாங்கள் உற்பத்தி செய்து மற்ற பண்ணையாளர்கள் வளர்க்கவும் விற்கிறோம்.

இந்த மீன்களுக்கு உணவாக சோயாபீன்ஸ், கருவாட்டு தோல், புண்ணாக்கு, தவிடு, கோதுமை மாவு, அரிசி மாவுகளை உள்ளடக்கிய மிதவை தீவனங்களைக் கொடுக்கிறோம்.

இந்த தீவனங்கள் ஆந்திராவில் மட்டுமே கிடைக்கிறது. பாலியெத்திலின் பிளாஸ்டிக் குளங்களில் தேக்கும் தண்ணீர் வீணாகாமல் இருக்க, மறுசுழற்சி முறையில் மீண்டும் மீன்களை வளர்க்கப் பயன்படுத்துகிறோம். இந்த மீன்களை நீர் ஆதாரம் இருந்தால் விவசாயிகளும் களிமண்ணில் குளம் தோண்டி வளர்க்கலாம்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.