யானையை பலிவாங்கிய ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம்அசாமில் 150 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,000 கோடி செலவில் பாபராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி நிறுவனத்தின் மூலிகை பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு 10 அடி குழியில் ஒரு பெண் யானை ஒன்று நேற்று தவறி விழுந்தது. அதை மீட்பதற்குள் மேலும் ஒரு ஆண் யானை மற்றும் ஒரு குட்டி யானை அந்த குழிக்குள் தவறி விழுந்தன. இதனால் அந்த பெண் யானைக்கு கால் மற்றும் தலைப்பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆண் யானை குழியில் இருந்து வெளியேற, குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.  இதையடுத்து பெண் யானையை மீட்க வனத்துறையினர் போராடினர். ஆனால், பலத்த காயம் ஏற்பட்டதால் அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், அந்த ஆண் யானை மற்றும் குட்டி யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதஞ்சலியின் பூங்கா அமையும் இடம் யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதி என்று கூறப்படுகிறது. இதனால் பதஞ்சலி நிர்வாகத்தின் கவனக்குறைவாலேயே யானை உயிரிழந்ததாக அந்நிறுவனத்துக்கு கடும் கண்டனங்கள்  தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அசாம் மாநில வனத்துறை அமைச்சர் பரிமளா ராணி கூறுகையில், "யானை உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.