அறிவாளி மோடிக்கு ஆலோசனை சொன்னது இந்த அறிவு! தானம்நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும்
என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட பின் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசின்
நடவடிக்கைக்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த முக்கிய முடிவிற்கு பின்னால் இருப்பவர் யார் என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன.
புனே நகரைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான அனில் போகில், பிரதமர் மோடியை சில
மாதங்களுக்கு முன்னர் சந்தித்திருக்கிறார், இச்சந்திப்பின் போது இந்திய பொருளாதார
சீர்திருத்தம் பற்றிய அவரின் திட்டங்களைப் பற்றி எடுத்துரைக்க அனிலுக்கு 9 நிமிடங்களே
தரப்பட்டுள்ளன.
கருப்புப் பண விவகாரம் தொடர்பாக அனிலின் செயல் திட்டத்தை கேட்ட பிரதமர் நரேந்திர
மோடி, அச்செயல்திட்டத்தால் கவரப்பட்டுள்ளார், பின்னர் இது தொடர்பாக இவர்களின்
உரையாடல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை மாலை, பிரதமர் வெளியிட்ட அறிவிப்புக்கு பின்னால் இருந்தது அனில்
முன்மொழிந்த செயல்திட்டமே என்று கூறப்படுகிறது.
பிரதமரிடம் அனில் முன்மொழிந்த செயல்திட்டத்தில் இருந்த முக்கிய சாராம்சங்கள்:
1. ஏற்றுமதி - இறக்குமதி வரிகளை தவிர்த்து, தற்போதுள்ள 56 வகையான வரிகளை திரும்பப்
பெற வேண்டும்.
2. இந்தியாவில் பெரு மதிப்பு கொண்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுதல்.
3.அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாக காசோலை, வரைவோலை மற்றும்
ஆன்லைன் மூலமே நடைபெறவேண்டும்.
4. வருவாய் வசூலுக்கு ஒற்றை வங்கி முறை.
இந்த பரிந்துரைகளை அனில், முன்மொழிந்ததற்கு பின்னால் இருந்த முக்கிய காரணங்கள்:
இந்தியாவின் ஒருநாள் பண பரிவர்த்தனை 2.7 லட்சம் கோடி ரூபாய், ஓர் ஆண்டுக்கு என
கணக்கிட்டால் இதுவே 800 லட்சம் கோடி ரூபாய் ஆகிறது. இதில் வெறும், 20% அளவிலான
பரிவர்த்தனைகள் மட்டுமே வங்கிகள் மூலம் நடைபெறுகின்றன, மீதி அனைத்தும் ரொக்கமாக
வேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் ஆகும்.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.