பொது சிவில் சட்டம் குறித்த குஸ்புவின் கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை – திருநாவுக்கரசர்



மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், குஷ்பு தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. குஷ்பு ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.