மோடியால் அமீரகத்தில் உருவான செல்லாக்காசு ! இந்திய தூதரகம் விளக்கம்.!எந்தவித சரியான முன்னெற்பாடுகளோ, மாற்று யோசனைகளோ இல்லாமல் மோடியால் செல்லாக்காசு என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு  அமீரகத்தில் பணிபுரியும் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் செய்வதறியாது விழித்துக் கொண்டுள்ளனர்.

இது எல்லாம் கள்ளப் பணமோ, கருப்புப் பணமோ அல்ல. அமீரகம் வாழ் இந்தியர்கள் அனைவரும் தாங்கள் ஊருக்கு செல்லும் போது தேவைப்படும் போக்குவரத்து செலவுகள் மற்றும் விமான நிலைய தண்டச் செலவுகளுக்காக மிக சொற்பளவில் அவரவர் சேமித்து வைத்திருப்பவை தான்.

இந்த சேமிப்பையும் தற்போது மாற்ற முடியாமல் தவித்து வருவதை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரி நீதா பூஷன் அவர்கள் கூறும் போது, இதுவரை எங்களுக்கு இந்திய அரசிடமிருந்து எந்த வழிகாட்டலும் வரவில்லை என்றாலும் அரசின் அறிவுறுத்தலைக் கேட்டு அரசை அணுகியுள்ளோம் என்றும், இந்தியர்கள் கோருவது போல் பணத்தை மாற்றித் தர தூதரகத்தில் தனிக்கவுண்டர்கள் திறக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

யுஏஇ எக்ஸ்சேஞ்ச் எனும் இந்தியருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் இந்திய பணத்தை மாற்றித் தருவதாக வாட்ஸ்அப்பில் சிலர் வதந்தி பரப்பியதை தொடர்ந்து இங்கும் இந்தியர்கள் திரள துவங்கினர் ஆனால் புதிய 500 மற்றும் 2000 நோட்டுக்கள் இறக்குமதி செய்யபடவில்லை என்றும் சில்லரை நோட்டுக்களும் தங்களிடம் இல்லை என்றும் கையிருப்பில் உள்ள செல்லாத நோட்டுக்கள் தொடர்பாக அமீரக சென்ட்ரல் பேங்க்கின் அறிவுறுத்தலை எதிர்பார்ப்பதாகவும் முடித்துக் கொண்டார்.

மேலும், அமீரகத்தில் செயல்படக்கூடிய இந்திய அரசு வங்கியான 'பேங்க் ஆஃப் பரோடா'வும் செல்லாதது என மோடியால் அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை மாற்றித் தருவது குறித்து மூச்சுவிடவில்லை.

Source: Gulf News
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.