ஜஸ்ட் மிஸ்ஸான ஆட்டோ. அண்ணா மேம்பால விபத்தின் சிசிடிவி - வீடியோசென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து நேற்றிரவு தறிகெட்டு ஓடிய லாரி 15 அடி உயரத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுந்தது. இந்த சம்பவம் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவானது. அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 திருவொற்றியூரிலிருந்து தாம்பரத்துக்கு சென்ற டிப்பர் லாரி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாமேம்பாலத்தில் 8ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் வந்தது. இந்த லாரி மேம்பாலத்தில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடத்தொடங்கியது. டிரைவர் சுதாரிப்பதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் மேம்பாலத்தின் தடுப்புசுவரை இடித்துத்தள்ளிய லாரி, 15 அடி உயரத்திலிருந்து தலைகீழாக விழுந்தது. மேம்பாலத்தின் கீழே உள்ள சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ, இரண்டு டாடா ஏஸ் வாகனங்களின் மேல் லாரி விழுந்ததில் மூன்று வாகனங்களும் சேதமடைந்தன.

 இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனடியாக எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 15 இடங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. ராட்சத கிரேன்கள் பயன்படுத்தி விபத்துக்குள்ளான டிப்பர் லாரி மற்றும் சேதம் அடைந்த வாகனங்கள் அகற்றப்பட்டன. மீட்பு பணிகள் அதிகாலை 4.30 மணி வரை நடந்தது.

 இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிப்பர் லாரி டிரைவர் மணிகண்டன் சிறு காயங்களுடன் தப்பினார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு கவனக்குறைவாக டிப்பர் லாரியை ஓட்டியதாக டிரைவர் மணிகண்டனை போலீஸார் கைது செய்தனர்.

 இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "டிப்பர் லாரியை ஓட்டிய டிரைவர் மணிகண்டன் தாம்பரம், கடத்தேரியை சேர்ந்தவர். இவர், டிப்பர் லாரியில் குரோம்பேட்டையிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு திருவொற்றியூருக்கு சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து தாம்பரத்துக்கு செல்லும் வழியில் டிப்பர் லாரி விபத்துக்குள் சிக்கியுள்ளது. ஆட்நடமாட்டம் இல்லாததால் பெரியளவில் விபத்து நடந்தாலும் உயிர்சேதம் இல்லை. டிரைவர் மணிகண்டனும், லாரியிலிருந்து குதித்து தப்பியுள்ளார். லாரி கீழே விழுந்ததில் சேதமடைந்த டாடா ஏஸ் வாகனம், அங்கு மரக்கடை நடத்தி வரும் ரியாஸ் என்பவரும், ஆட்டோ, ரவிக்குமாருக்கும் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. மேம்பாலத்தில் 10 அடி அளவுக்கு தடுப்பு சுவர்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. அந்த பகுதியில் தற்காலிகமாக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அந்த பகுதியில் வாகனங்கள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன"என்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.